உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தொடரியல்

239

மேற்காட்டியவற்றிலிருந்து, நேர்கூற்றுச் சொற்களை நேரல் கூற்றுக் காலத்திற்கும் இடத்திற்கும் ஏற்ப மாற்றிக்கொள்ள வேண்டுமென்றும்; ருவகைக் கூற்றினாலும் குறிக்கப்படும் காலமும் இடமும் ஒன்றாயிருப்பின், நேர்கூற்றுச்சொற்கள் நேரல்கூற்றில் மாறுவதில்லையென்றும்; அறிந்துகொள்க.

நேர்கூற்று வாக்கியம், கூறுவான் பெயரொடு தொடங்கி, என்றான்' அல்லது ‘என்று சொன்னான்' என்னும் முறைமையில் முடிவது இயல்பு. கூற்றுக்குமுன், 'சொன்னான்' அல்லது 'கூறினான்' என்பதுபோன்ற கூறுதல் வினைச்சொல்லை நிறுத்தி 'முன் முடிபு' வாக்கியமாகக் கூறின், 'என்று' என்னும் சொல் இறுதியில் நிற்றல் வேண்டும்.

எ-டு : பெரியண்ணச் செட்டியார் "நாளைக்கு நல்ல சம்பா அரிசி வருகிறது” என்றார் (என்று சொன்னார்).

தம்மண்ணச் செட்டியார் சொன்னார், "இராமசாமிக் கவுண்டர் இளைஞராயினும் அறிவாற்றல் மிகப்படைத்தவர்” என்று.

நேர்கூற்று, 'சொன்னது' அல்லது 'சொன்னதாவது' என்னுங் தொடருக்குப் பின்வரின், 'என்பது' என்னும் சொல்லால் முடிக்கப்படுதல் வேண்டும்.

எ-டு : இராவ்சாகிபு இரத்தினசாமிப் பிள்ளை இராமசாமிக் கவுண்டருக்கு 1942-ல் சொன்னது, “இச் சேலங் கல் லூரியை இன்னும் ஓராண்டிற்குள் முதல்தரக் கல்லூரியாக்கி விடுவேன்; ஆ கையால், நீங்கள் வேறெங்கும் செல்ல வேண்டா" என்பது.

நேர்கூற்றில் மேற்கோட்குறி இருப்பினும் இராவிடினும், என்றான்' ('என்று சொன்னான்') அல்லது 'என்பது' என்னும் முடிப்புச்சொல் இன்றியமையாததாகும்.

முருகன் சொன்னான், "நான் வருவேன்", ஆங்கிலத்திற்போ லெழுதுதல் வழுவாகும்.

அழகன் சொன்னதாவது, “நான் எழுதுவேன்” என்பது,

என்னும் முன்முடிபு அமைப்பினும்,

அழகன் “நான் எழுதுவேன்" என்றான்

என்று

என்னும் பின்முடிபு அமைப்பே இயல்பானதும் இனியதுமாகும்.