உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




240

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

ஓர் உரையாட்டிலுள்ள கூற்றுகளை முடிப்புச் சொற்களின்றி மாறிமாறி யெழுதுவது, உரையாட்டு நடையேயன் றிக் கட்டுரை நடையன்று.

ஏற்கா.

(1)

(2)

(3)

(4)

குறுகிய கூற்றுகளேயன்றி, நீண்ட கூற்றுகள் நேரல் கூற்றிற்கு

பயிற்சி 1

கீழ்வரும் நேர்கூற்று வாக்கியங்களை நேரல்கூற்றாக மாற்றுக:

மறைமலையடிகளை இராவ்சாகிபு இரத்தினசாமிப் பிள்ளையவர்களின் மகளார் திருமணத்தை நடத்தி வைக்கும்படி அழைத்ததற்கு, அவர் "யான் இன்று பாயும் படுக்கையுமாயுள்ளேன். ஆதலால், யான் வருதற்கில்லை. ஆனால், என் மூத்த மகன் மாணிக்கவாசகத்தை அனுப்பி வைக்கின்றேன். ஏற்றுக்கொள்க,” என்று பதிலெழுதி விட்டாராம்.

ஒரு துறவி, மீன் பிடித்துக்கொண்டிருந்த ஒரு செம்பட வனை நோக்கி, "ஐயோ! நீ எப்போது கரையேறுவாய்?' என்று கேட்டார். அதற்கு அவன் ஐயா, என் பறிநிரம்பினால் கரையேறுவேன்” என்றான்.

66

ஒரு பெரியார் வழக்குக் கேள்விக்கு (Hearing) வந்தது. தீர்ப்பாளர் குற்றாலம் பிள்ளை அவரை நோக்கி, "நீர் நாமக்கல்லில் நிகழ்த்திய சொற்பொழிவினின்று, நீர் வகுப்புப் பகைமை மூட்டிவருவது தெளிவாகின்றது. ஆதலால், உமக்கு 500 ரூ. தண்டம், அது கொடுக்கத் தவறினால் ஆறு மாதக் கடுங்காவல், விதிக்கின்றேன்,' என்று தீர்ப்பளித்தார். அதற்கு அப் பெரியார், “எனக்குத் தண்டங்கொடுக்க விருப்பமில்லை. ஆறுமாதக் கடுங்காவலே அடைகின்றேன்”, என்று கூறிக் காவற்கூடஞ் சென்றார்.

ஞ்

ஒரு முரட்டுச்சேவகன் தன் மனைவியை நாள்தோறும் காரணமில்லாமல் அடித்துக்கொண்டிருந்தான். ஒருநாள் வழக்கப்படி அவளை அடிக்கையில், அவள் "நீ ஏன் இப்படி என்னை அடிக்கின்றாய்?" என்று கேட்டாள். அதற்கு அவன், "நான் சொன்னபடி செய்யாமையால் அடிக்கின்றேன்”, என்று சொன்னான். உடனே அவள்