உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தொடரியல்

241

அவனுக்கு மதி கற்பிக்க எண்ணி, "இனிமேல் நீ சொன்ன நீ படியே செய்கின்றேன். ஆனால், என்னை அடிக்கக் கூடாது”, என்று சூள் (ஆணை) இடுவித்துக் கொண்டாள். பின்பு ஒருநாள், "அடி! அடி! எங்கே போகிறாய்?” என்று கேட்டான். அவள் ஓடிவந்து அவனை இருமுறை அடித்து, "நீ சொன்னபடியே செய்தேன்" என்றாள். மற்றொரு நாள், அவன் அவள் தலையில் உமியைப் பார்த்து "அடி! தலையில் உமி" என்றான். அவள் உடனே அவனை ஓரடியடித்து அவன் தலையில் உமிழ்ந்தாள். வேறொரு நாள் கொஞ்சம் பணங் கொண்டுவந்து கொடுத்து, "இதை வீட்டுக்குள்ளே வை என்றான். அவள் அதை வீட்டுக்குள்ளே காண்டுபோய், "மூடனுடைய பணமே! முரடனுடைய பணமே!" என்று வைது கொண்டிருந்தாள். அவன் இவற்றை யெல்லாம் எண்ணிப் பார்த்து, அறிவடைந்து, அதற்குமேல் அவளை அடிப்பதை நிறுத்திவிட்டான்.

(5) சென்ற நகராண்மைத் தேர்தலில், சின்னையன் நன்னை யனிடம், “உனக்கு எப்படியாவது நூறு குட வோலைகளை (Votes) வாங்கித்தருகின்றேன். ஆனால், நீ தேர்ந் தெடுக்கப்பட்டவுடன், என் வீட்டுத் தாழ்வாரத்தை இடிப்பதற்குப் பிறப்பித்துள்ள உத்தரவை நீக்குவதற்கு ஏற்பாடு செய்யவேண்டும்", என்று ஒப்பந்தஞ் செய்து

(6)

(7)

கொண்டான்.

"500 ரூபா தாள் நாணயம் (நோட்டு) உள்ள என் பணப்பை நேற்று மாலை புகைவண்டி நிலையத்திற்குப் போன வழியில் தவறிவிட்டது. அதை யெடுத்தவர் என்னிடங் கொண்டுவந்து கொடுத்தால், உடனே 100 ரூபா நன்கொடை யளிக்கின்றேன்”, என்று பெரியண்ணச் செட்டியார் விளம்பரஞ் செய்திருக்கின்றார்.

ஒரு பேராசைப் பேயன் ஒரு தெய்வத்தினிடம் வரங் கேட்கச் சென்றபோது, அத் தெய்வம் அவன் பேராசையை அறிந்து, "நீ பல வரங்கேட்டால் கொடுக்கமாட்டேன். ஒரே வரங்கேள்.கொடுக்கின்றேன்" என்று சொல்ல, அவன் அதற்கிசைந்து, "தெய்வமே! என் பேரனுக்குப் பேரன் எழுநிலை மாடத்திலிருந்து பொற்கலத்தில் பாலும் பழமு