உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




242

(8)

(9)

(10)

(11)

முண்ண, நான் கண்குளிரக் கேட்டான்.

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

காணவேண்டும்”, என்று

மோசே காட்டில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த போது, திடுமென்று ஓரிடத்தில் ஒரு முட்செடி தீப்பற்றி யெரிந்தது. அவர் அவ்விடஞ் சென்றபோது, "நீ நிற்கு மிடம் தூய்மையானது. உன் பாதக்காப்பைக் கழற்றிவிடு," என்று ஒரு வானொலி கூறிற்று.

சீதை அனுமனிடம், "இன்னும் ஒரு மாதம் இங்கிருப்பேன். அதற்குள் என் கணவன் இங்கு வராவிடின் நான் உயிர் துறப்பேன்", என்று சொன்னாள்.

"நான் சென்னையிலிருந்து திருவாங்கூர் சென்று வேலை யிலமர்ந்தேன். நோய்வந்து நெடுநாளாகத் தீராமையால் வேலை போய்விட்டது. இன்று குடும்பத்துடன் சொந்த வூருக்குத் திரும்பிப்போகின்றேன். கையிற் காசில்லை. ஏதேனுங்

கொடுத்துதவுங்கள்,” என்று இதற்குள்

எத்தனையோபேர் என்னிடம் சொல்லி விட்டனர்.

ரூபா

ஒரு கணியன் (சோதிடன்) என்னிடம் வந்து, “நீ பாம்பினாற் கடியுண்டிறப்பாயென்று ஒரு சாபமிருக் கின்றது. எனக்கு 5 காடு. ஒரு குளிசங்கட்டி அச் சாபத்தைப் போக்குகின்றேன்”, என்று என்னை ஏய்க்கப் பார்த்தான். நான் அதற்கு இடந்தரவில்லை.

(12) நான் சென்ற ஆண்டு இலங்கைக்குச் சென்றிருந்த போது, அங்கோர் எத்தன், முன்னதாக வழியில் ஒரு பித்தளை நகையைப் போட்டுவிட்டுவந்து, என்னோடு கூட நடந்து தான். புதிதாய் அந் நகையைக் கண்டெடுத்தது போல் எடுத்து, 'இதோ பார்! ஒரு நல்ல பொன் நகை! இது 50 ரூபாய் பெறும்போலிருக்கிறது. இது நம்மிருவருக்கும் பொது. கடைக்குப்போய் விற்று நாமிருவரும் பகிர்ந்து கொள்ளலாம். ஆனால், எனக்கு நேரமில்லை. உடனே புகைவண்டிக்குப் போகவேண்டி யிருக்கின்றது. ஆகை யால், நீயே எடுத்துக்கொள். ஒரு மதிப்பாய் விலையிட்டுப் பாதியைக் கொடுத்துவிடு. நான் போகிறேன்”, என்று சொன்னான். நான் “எனக்கு இது வேண்டா. நீதானே எடுத்துக்கொள்", என்று சொல்லி விட்டுப் போய் விட்டேன். இங்ஙனம் எத்துணையோ ஏமாற்றங்கள் நடந்து வருகின்றன.

கு