உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தொடரியல்

(13)

(14)

(15)

243

படைத்தலைவன் தன் படைமறவரை நோக்கி, "இதுவே சமையம். எதிரிகளைத் தாக்குக”, என்று கட்டளை யிட்டான்.

"தாசுமகால் என்ன அழகாயிருக்கின்றது!" என்று திரும்பத் திரும்ப வியந்தார் நம்முடன் வந்தவர்.

"பழனியப்பன் நன்றாய்ப் படிக்கின்றானா? தேர்விற்கு இன்னும் எத்தனை நாளிருக்கின்றன? அவனுக்கு ஏதேனும் பணம் வேண்டுமா?" என்று அவன் தந்தையார் எனக்கு எழுதிக் கேட்டிருக்கின்றார்.

(16) "அடுத்த வாரம் எம் கல்லூரியில் மாணவர் தமிழ்க் கழகத்தின் சார்பாகத் தாங்கள் ஏதேனுமொரு பொருள் பற்றிச் சொற்பொழிவாற்ற முடியுமா?" என்று திருவாளர் சோமசுந்தர பாரதியார் அவர்கட்கு எழுதிக் கேட்டதற்கு அவர்கள் "இன்னும் இரு மாதம் பொறுத்துத் தெரிவிக் கின்றேன்”, என்று பதிலெழுதிவிட்டார்கள்.

(17)

(18)

அந்தப் பிள்ளையைப் பார்த்தவரெல்லாரும் "ஐயோ! பாவம்!" என்றிரங்குகின்றனர்.

"இனிமேல், எந்தக் காரணத்தையிட்டும், எழுத்தாளர் அறைக்குட் செல்லக்கூடாது”, என்று எம் கல்லூரித் தலைவர் ஆசிரியர்க்குக் கண்டிப்பாய்க் கட்டளை யிட்டு விட்டார்.

(19) "வருகிற நவராத்திரி விடுமுறைக்கு இங்கே வாருங்கள். குளிர்ந்த அருவியிற் குளிக்கலாம். இனிய தென்றல் நுகரலாம். உடல் மிக நலமுறும்", என்று குற்றாலத்தி லிருந்து நல்லதம்பிப்பிள்ளை எழுதியிருக்கின்றார்.

(20) நேற்று நான் திரைப்படத்திற்குப் போகவிருந்தேன். என் தந்தையார் "போகவேண்டா" என்று தடுத்துவிட்டார். (21) "இன்றிருந்து நான் கள்ளையே தொடுவதில்லை" என்று எத்தனையோபேர் அன்று நோன்பு பூண்டு கொண்டனர்.

(22) "இந் நிலம் தங்கட்கும் தங்கள் வழியினர்க்கும் கதிரவனுந் திங்களுமுள்ள காலமெல்லாம் முற்றூட்டாய் (சர்வ மானியமாய்) இருக்கக்கடவது," என்று செப்புப் பட்டயத் திற் கண்டிருக்கின்றது.

(23) "இத் தொகையைத் தாங்களேனும் தங்கள் உத்தரவு பெற்றவரேனும், என்று கேட்டாலும், வட்டியும் முதலு