உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




244

மாகக்

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

கொடுத்துத் தீர்க்கின்றேன்" என்று எழுதிக்

கொடுத்திருக்கின்றார்.

று

(24) "தமிழ் வாழ்க! தமிழ்ப்பகை வீழ்க! அன்பு ஓங்குக! அறியாமை நீங்குக!" என்று தலைவர் முன் சொல்ல, அவையோ ரெல்லாரும் பின் சொல்லி ஆரவாரித்தனர். பயிற்சி 2

(1)

(2)

(3)

(4)

(5)

(6)

கீழ்வரும் நேரல்கூற்று வாக்கியங்களை நேர்கூற்றாக மாற்றுக: ஆள்வினையர் தில்லியிலும், பகைவர் காளிக்கோட்டத் திலும், நண்பர் பம்பாயிலும், அடிமையர் சென்னையிலும் இருப்பதாக, கிச்சினர் பிரபு கூறியிருக்கின்றார். திருவனந்தபுரத்தில் அரசர் கோயில் தீப்பற்றியதற்குக் காரணங் கேட்டபோது, அதற்குச் சற்றுமுன்பு அவ் அரசர் இங்கிலாந்து சென்று மீண்டதனால், தெய்வத்திற்குச் சினம் மூண்டதாகச் சொல்லப்பட்டதாம்.

காந்தியடிகள் இறந்த செய்திகேட்ட ஒரு துறவியார், டாக்டர் அழகப்பச் செட்டியாரிடஞ் சென்று, தமக்கு இறந்தோரைப் பிழைப்பிக்கும் ஆற்றலிருப்பதாகவும், தம்மைத் தில்லிக்கு உடன் கொண்டுசென்றால், காந்தி யடிகளைப் பிழைப்பித்துவிடுவதாகவும் சொல்லி, அவருடன் வானூர்தியிலேறி தில்லிக்குச் சென்றார்.

சென்ற உலகப் பெரும்போர்த் தொடக்கத்தில், இலண்டன் மாநகர் அழிந்துவிடுவதானால் மிகப் பேரிழப்பாகும் என்பதாக, காந்தியடிகள் கவன்றார்.

அவர் மறுநாள் எனக்காக விடுமுறை பெற்றுக்கொண்டு வட்டாரக் கல்வியதிகாரியைப் போய்ப் பார்ப்பதாகச் சொல்லி, தாம் மறந்துவிடாதவாறு தம் அரையாடையில் முடிபோட்டுக் கொண்டார்.

சென்னை மாகாணத்திற் பலவிடங்களில் நச்சுக்கழிச்சல் (பேதி) தோன்றியிருப்பதால், வருகிற மகாமகத்திற்கு வெளியார் ஒருவரும் ஊசி போட்டுக் கொள்ளாமல் கும்பகோணஞ் செல்லக்கூடாதென்பதாக, அரசியலார் உத்தரவிட்டிருக்கின்றனர்.

(7) கோழி திருடினவளைக் கண்டுபிடித்தற்கு, கோழி திருடி னவள் தலையில் தூவியிருக்குமென்பதாக, மரியாதை ராமன் வலக்காரமாய் (தந்திரமாய்)ச் சொன்னான். உடனே,