உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தொடரியல்

(8)

(9)

245

பல பெண்டிரிடையே நின்ற கோழிதிருடி, தன் தலையைத் தடவிப்பார்த்தாள். அவள் உடனே கண்டு பிடிக்கப்

பட்டாள்.

மனித இனங்களின் அழிவைப்பற்றிக் கூறுமிடத்து தாசுமேனியாவில் (Tasmania) ஆங்கிலேயர் கால்வைத்த போது, அங்கிருந்து பழங்குடிமக்கள், சிலரால் 7,000 பேர் என்றும், சிலரால் 20,000 பேர் என்றும், மதிக்கப் பட்டதாகவும்; முக்கியமாய் ஆங்கிலேயரோடும் தம்முள் ஒருவரொருவரோடும் பொருததனால், அவர்கள் தொகை விரைந்து குறைந்ததாகவும்; அங்குக் குடியேறினவர்கள் ஆடிய பேர்போன வேட்டைக்குப் பின்பு, எஞ்சி யிருந்தவர்கள் தங்களை அரசியலார்க்கு ஒப்புக் கொடுத்தபோது, அவர்கள் 120 பேராய் இருந்ததாகவும்; அவர்கள் 1832-ல் பிளிந்தர்சு (Flinders) தீவிற்குக் கொண்டு போகப்பட்டதாகவும்; அத் தீவு தாசுமேனியாவிற்கும் ஆத்திரேலியாவிற்கும் இடையில், 40 கல் நீளமும் 12 முதல் 18 கல் வரை அகலமுமுள்ளதாகவும்; அது நலத்திற் கேதுவானதாயிருந்து அங்கு அப் பழங்குடிமக்கள் நன்றாக நடத்தப்பட்டும் நலங்குன்றி மிக வருந்தியதாகவும்; 1834-ல் அவர்கள் 47 வளர்ச்சியடைந்த ஆண்களும், 48 வளர்ச்சி யடைந்த பெண்களும், 16 சிறு பிள்ளைகளுமாக மொத்தம் 111 பேராயிருந்ததாகவும்; 1835-ல் அவர்களுள் நூற்றுவரே எஞ்சியதாகவும்; அவர்கள் தொடர்ச்சியாய் விரைந்து குறைந்ததினாலும், தாங்கள் அயலிடத்தில் அவ்வளவு விரைந்து அழிந்துபோகக் கூடாது என்று அவர்களே கருதியதினாலும், தாசுமேனியாவின் தென் பாகத்திலுள்ள கிளிஞ்சிற் குடா (Oyster Cove) என்னு மிடத்திற்கு 1847-ல் அவர்கள் உய்க்கப்பட்டதாகவும்; அவர்கள் அன்று பதினால் ஆடவரும் இருபத்திரு பெண்டிரும் பத்துச் றுவருமாக இருந்ததாகவும்; அவ் விடமாற்றம் நன்மை பயக்காததினால், நோவுஞ் சாவும் அவர்களைத் தொடர்ந்து, 1864-ல் ஓர் ஆடவனும் மும்மூதாட்டியருமே எஞ்சி நின்றதாகவும்; அவ்ஆடவனும் 1869-ல் இறந்து போனதாகவும்; டார்வின் வரைந்திருக்கின்றார்.

பரிதிமாற்கலைஞன் என்னும் சூரியநாராயண சாத்திரியார் இருமல் நோயால் துன்புற்றபொழுதும், மாணவரை ஐயன்மீர் என விளித்து, இருமல் தம்முடன் பெருமல் செய்வதாக இரங்கிக் கூறிக்கொண்டே தமிழ்ப்பாடம் நடத்துவாராம்.