உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




246

(10)

(11)

(12)

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

மயில்வாகனர் (பின்னர் 'விபுலானந்த அடிகள்') ஒருநாள் தம் மாணவரைநோக்கி, சிவபெருமான் அவர்கட்குக் காட்சி தந்து அவர்கட்கு என்ன வரம் வேண்டும் என்பதாகக் கேட்டால், அவர்கள் என்ன கேட்பார்கள் என்பதாகத் திடீரென்று கேட்டாராம். கேட்டாராம். ஒவ்வொரு மாணவரும் ஒவ்வொன்றைச் சொன்னாராம். இறுதியில் மயில்வாகனர், தம்மைக் கேட்பின் தாம் முத்திதரும்படி கேட்கமாட்டாததாகவும், முத்தி அவரளவில் நின்று விடுவதாகவும், அதைவிட எல்லாரும் இன்புறுமாறு தாண்டுசெய்வதிலுள்ள இன்பம் மிகுதியாதலின், தொண்டுசெய்ய வரந்தரவும் தமிழ்ப்பணிசெய்ய வரமருளவும் தாம் கேட்பதாகவும், முகமலர்ச்சியுடன் கூறினாராம்.

விபுலானந்த அடிகள், தம் யாழ்நூலை அன்பர் ஒருவர் அச்சிட விரும்பினதாக, தம் நண்பர் ஒருவரிடம் குறிப்பிட் டாராம். அந் நண்பர், அடிகளின் அன்பர் சிறந்த படிப்பாளிபோல் தெரிந்ததாகக் கூறினாராம். அதற்கு அடிகள், அவ் அன்பர் பெரிய படிப்பாளியல்ல ராயினும், தமிழார்வம் மிக்கவரும் நற்பண்புகள் பெற்றவரும்

பெருஞ்செல்வரும் ஆனவர் என்பதாகவும்; தமிழ்நாட்டிலும் ஈழநாட்டிலும் தமிழ் கற்றார் பலருள்ளும் காணப்படும் பெருங்குறை ஒன்றுள்ளதாகவும்; அது பிறரிடம் நலன் எதுவும் காண விரும்பாமையாகும் என்பதாகவும்; புலவர் பிறர்பாலுள்ள நலன்களைக் கண்டு பொறாமை கொள்கின்றதாகவும்; வெளியில் உதட்டளவில் புகழ்வது தவிர உளமாரப் புகழாததாகவும்; அதனால் அவர் தம்முள மனவொற்றுமையின்றிச் சிதறுண்டு சிறப்பிழந்து தவிக் கின்றதாகவும்; மிகுந்த வருத்தத்துடன் கூறினாராம்.

கதிரவன் ஒளி காற்றின்வழியே நிலநோக்கி வருகையில் பல நிறங்களோ டுள்ளதாகவும், அப் பலநிறக் கதிர்களும் வாயுவணுக்களால் தனித்தனி பிரிக்கப்படுகின்றதாகவும், அவற்றுள் பிற கதிர்களைவிட மிகுதியாகப் பிரிக்கப் படுகின்ற நீலநிறக்கதிர்களே வானத்திற்கும் கடல்நீருக்கும் நீலநிறத்தை யளிக்கின்றதாகவும், சர் ச. வேங்கடராமன் கண்டுபிடித்துக் கூறியுள்ளனர்.

(13) மரஞ்செடி கொடிகளாகிய நிலைத்திணை

(தாவர)

உயிரிகளும், நம்மைப்போன்று மூச்சுவிடுகின்றதாகவும்