உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தொடரியல்

(14)

(15)

(16)

(17)

(18)

(19)

(20)

(21)

247

இன்பதுன்பம் நுகர்கின்றதாகவும், சர் சகதீசச் சந்திரபோசு காட்டியுள்ளார்.

எத்துணையோ அருந்தமிழ்க் கலைகள் பெயருந் தெரியாத படி கடலாற் கொள்ளப்பட்டொழிந்ததாக ஒரு புலவர் கூறி வருந்துகின்றார்.

கோவலன் கண்ணகியைவிட்டுப் பிரிந்து மாதவியுடன் ஒ கிவரும் நாளில், கண்ணகி தான் கண்ட தீக்கனா வொன்றைத் தன் தோழி தேவந்தியிடம் தெரிவிக்க; அவள் காவிரிப்பூம்பட்டினத்தருகிலுள்ள சோமகுண்டம் சூரிய குண்டம் என்னும் ஏரிகளில் நீராடிக் காமனைத் தொழுவார், இப் பிறப்பில் கணவருடன் கூடி யின்புறு வதுடன், மறுபிறப்பில் இன்பவுலகிற்போய்ப் பிறப்பதாகக் கூறி, அவற்றில் நீராட வருமாறு கண்ணகியை அழைக்க; அவள், அங்ஙனந் துறைமூழ்கித் தெய்வந் தொழுதல் தன்போன்றார்க் கியல்பன்மை கூறி மறுத்ததாக, சிலப் பதிகாரத்திற் கூறப்பட்டுள்ளது. பாடச்சொன்னாற் பாடமாட்டான்; சொன்னாற் பாடுவான்.

பாடாதிருக்கச்

ஈயச்சொல்லி இரத்தல் இழிந்தது; ஈதல் மறுத்தல் அதனினும் இழிந்தது; கொள்ளச் சொல்லிக் கொடுத்தல் உயர்ந்தது; கொள்ள மறுத்தல் அதனினும் உயர்ந்தது. படிக்கிற பிள்ளையைத் தடுத்தாலும் படிக்கும்; படிக்காத பிள்ளையைத் தூண்டினாலும் படிக்காது.

தீயதை விதித்தாலும் செய்யக்கூடாது; விலக்கினாலும் செய்தல்வேண்டும்.

நல்லதை

அரையனுக்கு வரி செலுத்துவதின் நியாயத்தைப்பற்றி ஒருவன் இயேசுவினிடம் கேட்டான். அவர் ஒரு நாண யத்தைக் கொண்டுவரச்சொல்லி, அதிலுள்ள வடிவத் திற்கும் எழுத்திற்கும் உரியவனைப்பற்றிக் கேட்டார். அவன், அவை அரையனுடையனவாகச் சொன்னான். அங்ஙனமாயின், அரையனுடையதை அரையனுக்கும் ஆ ண்டவனுடையதை ஆண்டவனுக்கும் செலுத்தச்

சொன்னார் இயேசுபெருமானார்.

மார்க்கசகாயர் என்னும் வேளாளப்பிரபு, தம் பண்ணை யிலிட்ட பயிர்கள் நெடுங்காலமாகப் பட்டுப் பட்டுப்