உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




248

(22)

(23)

(24)

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

போனமையால், அவற்றை விளையச் செய்பவர்க்குத் தம் மகள் வாசுகியை மணஞ்செய்து கொடுப்பதாக விளம்பரஞ் செய்திருந்தாராம்.

எங்கள் கல்லூரிக் காற்பந்துக் கட்சிக்கும் திருச்சிராப் பள்ளி சோசப்புக் கல்லூரிக் காற்பந்துக் கட்சிக்கும் நாளை மாலை பந்தயமாதலால், விளையாட்டாளரெல்லாரும் ஒவ்வொரு படுக்கை கொண்டுபோகுமாறும். அவர்கள் இன்று மாலை நாலுமணிக்குப் புகைவண்டி நிலையம் போய்ச்சேருமாறும், எங்கள் உடற்பயிற்சி யாசிரியர் அறிவிப்பு விடுத்திருக்கின்றார்.

யாதும் ஊரே என்பதாகவும், யாவரும் கேளிர் என்பதாக வும் பாடின புலவர் கணியன் பூங்குன்றனார்.

ஏறச்சொன்னால் எருதிற்குக் கோபம், இறங்கச் சொன் னால் முடவனுக்குக் கோபம்.

18. நிறுத்தக்குறிகள் (Punctuation)

நிறுத்தக்குறிகள் வாக்கியப் பிரிவுபாட்டிற்கும் பொருள் தெளிவிற்கும் இன்றியமையாதனவாதலின், அவையின்றி ஒரு வாக்கியமும் எழுதுதல்கூடாது.

1. காற்புள்ளி (Comma) வருமிடங்கள்

i. பொருள்களைத் தனித்தனி குறிப்பிடல்.

எ-டு : சென்னை, காஞ்சிபுரம், வேலூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சை, சேலம், கோவை (முதலிய பலவிடங்களில், மாணவர் மன்றத்தேர்வு நடைபெறும்.)

அறம், பொருள், இன்பம், வீடு (என வாழ்க்கைப் பேறு நான்கு)

ii. அடுத்தடுத்துவரும் ஒரே யெழுவாய் பயனிலைகள்.

எ-டு : கந்தன் வந்தான், இருந்தான், எழுந்தான், சென்றான். அது அறியாமையன்று, கவலையீனம்.

iii. எச்சச் சொற்றொடர்.

எ-டு : மக்கள்

வாழ்நாள் வரவரக் குறுகி வருதலானும், இன்றியமையாது கற்கவேண்டிய அறிவியல் துறைக்கே காலம் போதாமையானும், அறிந்த பொருள்களையே குறிக்கும் பல்வேறு மொழிச்சொற்களைக் கற்றல் மொழியாராய்ச்சி