உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தொடரியல்

யாளர்க்கன்றிப் பிறர்க்குப் பெரும் பயன் படாமையானும், உலக மொழியாகிய ஆங்கிலத்தை ஒருவர் எங்ஙனமும் கற்க வேண்டிய நிலை ஏற்பட்டிருத்தலானும், ஆங்கிலமும் தாய் மொழியும் ஆகிய இருமொழிகளைக் கற்றலே, (இக்காலத் திற்குப் போதியதாகும்.)

ஒருவர் இன்னொருவருடன் மறைபொருள் (இரகசியம்) பேசிக்கொண்டிருக்கும்போது, மூன்றாமவர் அவர்க்கு எத்துணை நெருங்கிய நண்பராயிருப்பினும், அவ் விடத்திற் குச் சென்று அவர் பேசும் பொருளை அறிய முயல்வது, (திருந்திய மக்கட்குரிய செயலன்று.)

iv. பட்டப்பெய ரிடையீடு.

எ-டு : திருவாளர் தியடோர் சாமுவேல் அவர்கள், எம்.ஏ., எல்.டி. V. முகவரிச் சொற்கள்.

எ-டு : கனம் உவாட்சன் அவர்கள், பி.ஏ. (ஆனர்சு), மேலாளர் (Man- ager), ஈபர் கண்காணியார் உயர்நிலைப்பள்ளி, புத்தூர், திருச்சிராப்பள்ளி.

எண் தானம்

vi. எ-டு: (இலண்டன் நகர மக்கள்தொகை 1941ஆம் ஆண்டுக் குடிமதிப்பின்படி), 8,655,000.

vii. எடுத்துக்காட்டுகள்

எ-டு : வருதி, வந்தை (வந்தனை), வந்தாய்.

வாழ்நன் வாணன், மகிழ்நன் - மகிணன்.

viii. இணைப்புச் சொல்.

எ-டு : திருவேங்கடம் தேர்விற்கு வந்தான்; ஆனால், எழுதவில்லை. ix. திருமுக விளி.

எ-டு : ஐயா,

ஐயன்மீர், ஐயைமீர்,

X. இணைமொழிகள்.

எ-டு : நல்லவன் கெட்டவன் செல்வன் ஏழை, இளைஞன் முதியன், சிறியவன் பெரியவன், (என்ற வேறுபாடு கூற்றுவனுக் கில்லை.)

xi. நெடுந்தொடரெழுவாய்.

எ-டு : செந்தமிழாக்கங் கண்ணுங் கருத்துமாய்ப் பேணும் ஒரு புலவர், வடசொல் வழங்குவதற்கோர் காரணம் வேண்டும்.

249