உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




250

xii பொருள் மயங்கும் இடம்.

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

எ-டு : குக்கு, கௌடோ செலவிற் கல்வி கற்றார்.

பயனிலை, முற்றுப்பயனிலை எச்சப்பயனிலை என இரு வகைப்படும்.

கண்ணகனார், ஊர்போய்ச் சேர்ந்தவுடன் என்னைக் கடிதம் எழுதச் சொன்னார்.

மறைமலையடிகள், மரணத்தின்பின் மனிதன் நிலையைப் பற்றி வரைந்துள்ளனர்.

xiii. பொருள் விளக்க இடைப்பிறவைப்பு :

எ-டு : மாரியப்பன், அதாவது காவேரி மகன், மணஞ்செய்த மறு நாளே இறந்துபோனான்.

xiv. ஒரு பொருளைச் சிறப்பாய் வரையறுத்தல்.

எ-டு : ஒருவன் பிறரிடத்தில், முக்கியமாய் எளியவரிடத்தில், இன்சொல் வழங்கவேண்டும்.

XV. வாக்கிய வுறுப்பாய் வரும் மேற்கோள். எ-டு : “அன்பே சிவம்”, என்றார் திருமூலர்.

Xvi. பகுதி குறிக்கப்படும் நூற்பெயர்.

எ-டு : தொல்காப்பியம், 28

xvii. நூற்பகுதி குறித்தல்.

எ-டு : ஈடு, 1, 4,2,168

xviii. தேதி.

எ-டு : 8, ஆனி, உருத்திரோற்காரி, 12, மார்ச்சு, 1942.

xix. சொற்பொருள்கள் கூறல்.

எ-டு : திரு - செல்வம், அழகு, தூய்மை, திருமகள்.

2. அரைப்புள்ளி (Semicolon) வருமிடங்கள்

1. புணர்வாக்கியம்.

கூட்டுக்கிளவியப் புணர்வாக்கியம்.

எ-டு : இயந்திரம் உழவுத்தொழில் செய்கிறது; மாவரைக்கின்றது; இடம் பெயர்விக்கின்றது; அச்சடிக்கின்றது; பொருள் ஆக்குகின்றது; போர் செய்கின்றது; இன்னும் எத்தனையோ வினைகளைச் செய்கின்றது.