உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




238

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

கல்வியமைச்சர் இங்கு (சேலத்திற்கு) வருவதாகச் சென்னையில் ஒருவர் சொன்னார்.

(5) சில வினைச்சொல் வடிவங்கள்

நேர்கூற்று

செய், செய்யுங்கள்,

செய்க

- நேரல்கூற்று.

நேரல்கூற்று

செய்ய

செய்யும்படி

செய்யவேண்டும்

செய்யேல், செய்யாதீர்,

செய்யற்க

செய்யக்கூடாது.

எ-டு: “ஊர்போய்ச் சேர்ந்தவுடன் கடிதம் எழுது (எழுதுங்கள், எழுதுக,”) என்று சொக்கப்பனார் என்னிடம் சொன்னார்.

- நேர்கூற்று.

ஊர்போய்ச் சேர்ந்தவுடன் என்னைக் கடிதம் எழுதச் சொன்னார் சொக்கப்பனார்.

-

- நேரல்கூற்று

(அல்லது)

ஊர்போய்ச் சேர்ந்தவுடன் நான் கடிதம் எழுதவேண்டு மென்பதாகச் சொன்னார் சொக்கப்பனார்.

நேரல்கூற்று

“எந்தக்காரணத்தையிட்டும் வகுப்பிற் பேசேல் (பேசாதீர்),” என்பது ஆசிரியரின் கட்டளை.

-

- நேர்கூற்று

எந்தக் காரணத்தையிட்டும் வகுப்பிற் பேசக்கூடா தென்பதாக ஆசிரியரின் கட்டளை.

- நேரல்கூற்று

“கடவுள் மழை அருள்க," என்பது மக்கள் வேண்டுகோள்.

- நேர்கூற்று

கடவுள் மழை யருளவேண்டு மென்பதாக மக்கள் வேண்டு கோள். - நேரல்கூற்று

கவனிப்பு : 'செய்ய', 'செய்யும்படி' என்னும் வாய்பாட்டுச் சொற்கள் வரின், 'என்று' என்னும் இணைப்புச் சொல் வராது. (6) வினைச்சொற் காலம்

நேர்கூற்று

செய்கிறது

நேரல்கூற்று செய்தது

எ-டு : "மருந்து கசப்பாயிருக்கிறது" என்றான் நோயாளி.

மருந்து கசப்பாயிருந்ததாகக் கூறினான் நோயாளி.

- நேரல் கூற்று