உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தொடரியல்

11. கீற்று (Dash) வருமிடங்கள்

i. மொழிபெயர்ப்பு.

எ-டு : எழுத்தியல் - Orthography

ii. பணத்தொகைக் குறிப்பு.

எ-டு : ரூ. 125-12-3.

iii. தேதிக்குறிப்பு.

எ-டு : 15-9-1947.

iv. சொற்றிரிபு குறித்தல்.

எ-டு : வாயில் வாயல்

-

-

வாசல்,

வித்யா - வித்தை - விச்சை - விஞ்சை.

V. பொருள் கூறல்.

எ-டு : விளித்தல் - கூப்பிடுதல்.

vi. இலக்கணங்கூறல்.

எ-டு : கொல்களிறு வினைத்தொகை

vii. தேர்வில் விடை கேட்டல்.

எ-டு : வெருவு, எறுழ், நனி - பொருள் தருக.

viii. தன் கருத்துரைத்தல்.

எ-டு: இத்தாலியர் ஆயிரக்கணக்கான எத்தியோப்பியரை நச்சுக் காற்றாற் கொன்றனர் – என்ன கொடுமை!

ix. சடுதியான கருத்து மாற்றம்.

எ-டு: என் தந்தையார் மட்டும் உயிரோடிருந்திருந்தால்! - அதை இன்று சொல்லி என்ன பயன்?

று

X. வெவ்வேறு கூறப்பட்ட பொருள்களைத் தொகுத்துக் கூறல். எ-டு : மாணவர், ஆசிரியர், அலுவலாளர், வணிகர், பொதுமக்கள்- எல்லா வகுப்பினரும் வந்திருந்தனர்.

xi. இடையளவு.

எ-டு : செய்யுள் 1-20.

xii. இடையொழிபு.

எ-டு : இ-ள். (இதன் பொருள்), எ-று. (என்றவாறு), எ-டு. (எடுத்துக்காட்டு).

257