உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




260

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

சொன்மூலக்குறியின் விரிவுப்புறத்திலிருப்பது மூலமும், முனைப்புறத்திலிருப்பது திரிபும் ஆகும்.

5. செருகற்குறி

எ-டு : தமிழ்க் கழகம்.

6. அம்புக்குறி

எழுதப்பட்ட ஒரு பகுதியின் இடையில் செருக வேண்டிய பகுதிக்கு இடமில்லாதிருப்பின், அதை வரந்தையில் (margin-ல்) எழுதி, அதனிடத்திலிருந்து அதைச் செருகவேண்டிய இடத்திற்கு இங்ஙனம் ஓர் அம்புக்குறியிட்டுக் கொள்ளலாம்.

குறிப்பு : நிறுத்தக் குறிகளிருக்குமிடத்திற் புணர்ச்சியும், புணர்ச்சியிருக்கு மிடத்தில் நிறுத்தக் குறிகளும், பொருந்தா. புணர்ச்சி யின்றியமையாத இடங்களிலெல்லாம், புணர்த்தே எழுத வேண்டும்.

திரிதற் புணர்ச்சியின்பின் காற்புள்ளியிட்டெழுதும் சில யாழ்ப்பாணப் புலவர் வழக்கம், பின்பற்றத்தக்கதன்று.

யிடுக:

எ-டு: செல்வம் பெருகப் பெருகக் கவலையும் பெருகுவதனாற், செல்வர்க்கு இன்பப்பெருக் கவ்வளவு துன்பப் பெருக்கு முண்மை அறியப்படும்.

பயிற்சி 1

கீழ்வரும் வாக்கியங்களில், வேண்டுமிடங்களில், காற்புள்ளி

(1) அவன் எழுபிறப்புப் பிறந்தாலும் இச் செய்யுட்குப் பொருள்

கூற முடியாது.

(2) தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் துளு குடகு துட கூ கோண்டி ஒரியா ஒராவோன் இராசமகால் பிராகுவீ எனத் திரவிடமொழிகள் மொத்தம் பதின்மூன்று.

(3)

செல்வம் தானே வந்தடைந்தாலும் கல்வி தானே வந்தடை யாது.

(4) அவனுக்கு அண்ணன் தம்பி அக்கை தங்கை ஒருவரு மில்லை.

(5) இந்தியத் தேசிய இயக்கம் முழு வெற்றிபெறுதற்கு அரை நூற்றாண்டாயிற்று.