உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தொடரியல்

261

(6)

மாந்தன் எவ்வளவோ நாகரிகத்தை யடைந்தும் இன்னும் ன அளவில் விலங்கு நிலையினின்று உயரவில்லை.

(7)

ந்தனிடத்திற் பொதுவாய்க்

காணமுடியாத

பல

(8)

(9)

நற்குணங்களை விலங்கு பறவைகளிடத்துக் காணலாம்.

கரியன் கபிலன் சிவப்பன் பொன்னன் வெள்ளையன் என நிறம்பற்றி மக்களை ஐவகையாக வகுக்கலாம்.

"என் மொழி தென்மொழி" என்று சொல்ல இன்றும் சில தமிழர் பின்வாங்குகின்றனர்.

(10) "தமிழன் நாய் போன்றவன்; ஏனெனின் தன்னினத்தை வெறுக்கின்றான்; வேற்றினத்தை விரும்புகின்றான்" என்று பா.வே. மாணிக்க நாயகர் சொல்வது வழக்கம்.

(11) 'ஒரு செல்வனிடத்திற் சென்று பாடினால் அவன் காசு கொடுக்காவிட்டாலும் போகின்றான்; காது கொடுக்க மாட்டேன் என்கின்றானே!" என்று சர்க்கரைப் புலவர் அடிக்கடி கூறுவர்.

(12) மன்னார்குடி இராசகோபாலையரும் அவர் தமையனாரும் முறையே யாழிலும் கின்னரியிலும் தேர்ச்சிபெற்றவர்.

பயிற்சி 2

கீழ்வரும் வாக்கியங்களில், வேண்டுமிடங்களில், அரைப்

புள்ளி யிடுக :

(1) எல்லா மக்கட்கும் பகுத்தறிவுண்மையும் இல்லை எல்லா விலங்கு பறவைகட்கும் பகுத்தறிவின்மையும் இல்லை.

(2) வருமுன் காப்போர் தலையர் வருகின்றபோது காப்போர் இடையர் வந்தபின் காப்போர் கடையர் வந்த பின்னுங் காவாதார் மடையர்.

(3)

வெண்பாவிற்குப் புகழேந்தி விருத்தத்திற்குக் கம்பன் குறளுக்கு வள்ளுவர் அகவற்குக் கபிலர்.

(4) மூத்த பிள்ளைக்கு உடல்வலி மிக்கிருக்கும் ளைய பிள்ளைக்கு மதிவலி மிக்கிருக்கும்.

(5)

பொய்சொல்லி வாழ்வதுமுண்டு மெய்சொல்லிக் கெடுவது முண்டு.

(6) மேலோர் வழிகாட்டவேண்டும் கீழோர் வழிச்செல்ல வேண்டும்.