உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




262

(7)

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

காதலில் மெய்க்காதலுமுண்டு பொய்க்காதலுமுண்டு உண்மையானதும் நீடிப்பதும் மெய்க்காதல் வஞ்சனை யானதும் குறுகிய காலத்ததும் பொய்க்காதல்.

(8) அறிஞர் குற்றம் பொறுத்தலை ஆண்மையாகக் கொள்ளு கின்றனர் அறிவிலிகள் பழிக்குப்பழி வாங்குதலை ஆண்மை யாகக் கொள்ளுகின்றனர்.

(9) பல வுண்மைகளைக் கற்றறியவேண்டும் பல வுண்மை களைப் பட்டறியவேண்டும் பட்டறிவதில் பல்வகை யிழப்புண்டாகலாம் அவற்றைக் கல்விக் கட்டணமாகக் கருத வேண்டும்.

(10) மூங்கில் எத்தனையோ வகையிற் பயன்படுகின்றது உண வளிக்கின்றது வீடு கட்ட உதவுகின்றது நாற்காலி மேசை செய்யப் பயன்படுகின்றது கொள்கலமாகின்றது. உண் கலமாகின்றது அளவைக்கருவியாகின்றது ஊர் திக் குதவுகின்றது வாராவதியாகின்றது தாள்செய்யப் பயன் படுகின்றது இன்னிசைக் கருவியாகின்றது நீர்க்குழாயா கின்றது வேலிக்குதவுகின்றது ஊதாங்குழலாகின்றது வாணவேடிக்கைக் குதவுகின்றது தேய்வை (Rubber) செய்தற்கு தவுவதாயுள்ளது இவற்றையெல்லாம் நினைக்கின்றோமா? ஒரு நாட்டில் ஒரு கருவிப்பொருள் கிடைக்கின்றது இன் னாரு நாட்டில் அதைக்கொண்டு செய் பொருளாக்கு கின்றனர் வேறுமொரு நாட்டில் அதைப் பயன்படுத்து கின்றனர்.

(11)

(12)

ன்

லக்கியத்தாற் சிலர் ன்புறுகின்றனர் சிலர் மதத் ண்டாற்றுகின்றனர் சிலர் குலத் தொண்டாற்று கின்றனர் சிலர் அரசியல் தொண்டாற்றுகின்றனர் சிலர் மக்களை முன்னேற்றுகின்றனர்.

பயிற்சி 3

கீழ்வரும் வாக்கியங்களில், வாக்கியங்களில், வேண்டுமிடங்களில், காற் புள்ளியும் அரைப்புள்ளியும் இடுக :

(1) பத்தனும் பித்தனைப்போல விழும் எழும் அழும் தொழும். (2) அறநூலுக்கு வள்ளுவன் பெருவனப்பிற்கு (பெருங்காப் பியத்திற்கு) இளங்கோவடிகள் கோவைக்கு மாணிக்க