உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தொடரியல்

263

வாசகர் உலாவிற்கு ஒட்டக்கூத்தன் அந்தாதிக்குப் பிள்ளைப் பெருமாள் பரணிக்குச் சயங்கொண்டார் காதலுக்குக் வருணகுலாதித்தன் சிந்திற்கு

மடலுக்கு

கூளப்பன் அண்ணாமலை.

(3) ஒருவன் செய்யாமற் கெட்டவனாகின்றான் ஒருவன் செய்து கெட்டவனாகின்றான்.

(4) சிலர் இரப்போன் ஊண்வேளைக்கு முந்திவந்தால் சோறு இன்னும் ஆகவில்லை என்பர் ஊண்வேளையில் வந்தால் இப்போதுதான் உண்ணுகிறோம் என்பர் ஊண்வேளைக்குப் பிந்திவந்தால் உண்டெல்லாம் ஆய்விட்டது என்பர்.

(5) பிள்ளை பிறக்கும்போது பெற்றோர் திறம் எதுவோ அதுவே பிள்ளைக்கும் இருக்கும்.

(6) பொதுவாக தந்தையியல் மகனுக்கும் தாயியல் மகளுக்கும் அமையும்.

(7) அரசன் ஒழுகுகின்றபடி குடிகளும் அன்னை தந்தை ஒழுகுகின்றபடி பிள்ளைகளும் ஆசிரியன் ஒழுகுகின்றபடி மாணவரும் ஆண்டை ஒழுகுகின்றபடி அடியரும் ஒழுகுவர். (8) எல்லாம் இறைவன் செயலா அல்லது உயிர்கள் செயலா அல்லது இரண்டும் கலந்த செயலா என்பது இன்னும் திட்டமாய்த் தெரியவில்லை.

(9) பிள்ளைகட்கு அறிவு ஆற்றல் வண்ணம் (நிறம்) வடிவு வாழ்நாள் முதலியன அமைக்குந்திறம் ஒருபகுதி பெற்றோர் கையிலுள்ளது. இதைப் பலர் அறியவில்லை.

(10) ஆட்சிமுறை பலவகைப்படும். ஒவ்வொரு வகையிலும் குற்றமுண்டு. ஆனால் குற்றம் மிகக் குறைந்த வகை எதுவோ அதையே கடைப்பிடித்தல் வேண்டும்.

(11)

(ii) எப்பொருளைப் பற்றியும் விரைந்து தீர்ப்புக் கூறுதல் கூடாது. ஏனெனின் நல்லதென்று நினைத்தது தீயதாக முடியலாம் தீயதென்று நினைத்தது நல்லதாக முடியலாம். (12) முதியோர் இளையோரின் தவறுகளைக் கண்டிப்பது முறையே. ஆனால் தாமும் அத் தவறுகளைத் தம் இளமையிற் செய்ததை மறந்துவிடக்கூடாது.

(13) கலையும் கம்மும் (Art and Science) எனக் கல்வி இரு திறப்பட்டது. நூல்வாயிலாகக் கற்றறிவது கலை. செயன்முறையாகப் பயின்றறிவது கம் அல்லது கம்மியம்.