உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




264

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

ஒவ்வொரு கம்மியத்திற்கும் தெரிவியல் (Theory) உண்டு ஒவ்வொரு கலைக்கும் புரிவியல் (Practical) உண்டு.

(14) பிள்ளையில்லாதவர் பிள்ளையில்லையே என்று வருந்து கின்றனர். ஆனால் பிள்ளைபெற்றவருட் சிலரோ பிள்ளை பிறந்துவிட்டதே என்று வருந்துகின்றனர்.

(15) வேலை செய்யாதவரெல்லாம் சோம்பேறிகளல்லர் வேலையைச் செய்யாமலும் சும்மாவிருக்கலாம் வேலை கிடையாமலும் சும்மா இருக்கலாம்.

(16) மனிதன் அறுபதாண்டு வாழும்போதே இத்துணை அட்டூழியஞ் செய்கின்றான். இனி ஆயிரமாண்டு வாழ் வதானால் எத்துணை அட்டூழியஞ் செய்வானோ தெரிய வில்லை.

(17) கோழியிலிருந்து முட்டையா முட்டையிலிருந்து கோழியா எது முன்வந்தது என்று அறிதற்கு தாயினி டத்தினின்று பிள்ளையா பிள்ளையினிடத்தினின்று தாயா யார் முன் வந்தது என்று அறிதல்வேண்டும்.

(18) திருடனுங் கடவுளை வழிபடுவதால் கடவுள் வழி பாட்டால் மட்டும் ஒருவனைப் பத்தனென்று துணியமுடி யாது.

(19) ஒருவன் தான் சாகும்போது எளியாரும் நல்லாரும் வருந்துமாறு வாழவேண்டும்.

(20) உலகவாழ்க்கை துன்பமே நிறைந்தது என்னுங் கொள்கை உண்மைக்கும் உத்திக்கும் பொருந்துவதன்று.

வேறு

(21) மறுமைச் செய்திகளெல்லாம் கண்டுகாட்டக் கூடியவை யல்லவாதலால் அவற்றைப்பற்றிய கருத்து பாட்டிற்குத் தாராளமாக இடந்தரவேண்டும்.

(22) பெரும்பான்மையோர் செயலெல்லாம் சிறந்தது என்பது பெரும்பாலும் தவறான கொள்கை.

(23) “மொழிவளர்ச்சிக்கு இன்னகால மென்றில்லை. என்றும் அது வளர்ந்துகொண்டேயிருக்கும்" என்பர் தைலர்.

(24) ஒவ்வொருவனுக்கும் தன்மொழி பொன்மொழி. ஆனால் தன்மொழியே வளரவேண்டு மென்பதும் பிறன்மொழி தளரவேண்டுமென்பதும் தவறாகும்.