உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தொடரியல்

265

பயிற்சி 4

கீழ்வரும் வாக்கியங்கட்கு நிறுத்தக் குறியிடுக :

(1) ஒவ்வொரு நாட்டிலும் ஆடவரினும் பெண்டிரே நீடு வாழ்பவரா யிருக்கின்றனர். இதற்குக் காரணம் ஆடவர் பெரும்பாலும் வீட்டினின்று வெளியேறி வேலை செய் வதும் உடலும் மூளையும் வருந்தியுழைப்பதும் இன்ப நுகர்ச்சியில் மிகுதியாய் ஈடுபடுவதும் குடும்பக் கவலை பெருத்திருப்பதும் பகைவருடன் பொருவதும் ஆகும்.

(2) பழந்தமிழ் நாட்டில் யாரேனும் ஒருவர் தும்மினால் அருகிருப்பவர் சிறப்பாகப் பெண்டிர் நீடுவாழ்க என்று வாழ்த்துவது வழக்கம்.

(3) கலிபோர்னியாவில் உள்ள சென் செர்மன் Gen Sherman மரம் இப்போது உலகத்திலுள்ள உயிர்ப் பொருள்களெல்லா வற்றினும் மிகப் பழைமையானதாகச் சொல்லப்படு கின்றது அதன் அகவை 4000 ஆண்டுகட்கும் 5000 ஆண்டுகட்கும் டைப்பட்டதாக மதிக்கப்படுகின்றது.

(4) யானையின் வாழ்நாள் 100 ஆண்டு முதலையின் வாழ்நாள் 300 ஆண்டு திமிங்கிலத்தின் வாழ்நாள் 500 ஆண்டு மாந்தன் வாழ்நாள் 100 ஆண்டுகூட இன்று

(5) அவை நால்வகைப்படும் அவை நல்லவை தீயவை நிறையவை குறையவை என்பன

(6) மோகஞ்சதாரோ நாகரிகம் கி.மு. 3000 ஆண்டுகட்கு முற்பட்டது.

(7) ஒரு காலத்தில் நல்வினையாகச் செய்யப்படுவது இன்னொரு காலத்தில் தீவினையாகத் தவிர்க்கப்படுகின்றது ஒரு நாட்டில் ஒழுக்கமாகக் கடைப்பிடிக்கப்படுவது இன் னொரு நாட்டில் இழுக்கமாக விலக்கப்படுகின்றது ஓர் ஆட்சியில் சட்டத்திற்குட்பட்டதாக ஒப்புக் கொள்ளப் பட்டு உயர்த்தத்திற் கேதுவாயிருப்பது மற்றோர் ஆட்சியில் சட்டத்திற்கு மாறானதாகக் கண்டிக்கப்பட்டுத் தண் டனைக் கேதுவாயிருக்கின்றது இங்ஙனம் அறநிலையாமை யும் உலகத்திலுள்ளது

(8) சில ஆண்டுகட்கு முன் சென்னையில் ஒரு சிறுவன் இருந் தான். அவன் திருக்குறளை முழுமையாகவும் பகுதி பகுதி