உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




266

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

யாகவும் தலைகீழாய் ஒப்புவிப்பான் முதற்சொல்லையோ இறுதிச் சொல்லையோ சொன்னாலும் எண்ணைக் குறித்தாலும் உடனே முழுக்குறளையும் சொல்லிவிடுவான் (9) மேனாட்டார் வருகைக்கு முந்திய நம் முன்னோருள் யாரேனும் இன்று மீண்டும் உலகில் வாழவந்தால் நம்மைக் கண்டவுடன் நம்மெல்லாரையும் பழனி திருப்பதிக்குப் போய்வந்தவராகவோ கடுநோய்ப்பட்டுத் தெளிந்தவ ராகவோ தான் கருதுவர்.

(10)

(11)

காந்தியடிகள் அடுகிடை (சத்தியாக்கிரக) இயக்கத்தை துவக்கினார் ஒத்துழையாமை யியக்கத்தை 1920-ல் துவக்கினார் சட்டமறுப்பியக்கத்தை 1930-ல் துவக்கினார் சர் தி. முத்துசாமி ஐயர் தம் மகனை நோக்கி அப்பா நான் உன்னைப்போலச் சிறுவனாயிருந்தபோது எவ்வளவு தொலைவான இடத்திற்கும் நடந்தே போனேன் நீயோ வீட்டிலிருந்து பள்ளிக்கூடத்திற்குப் போய்வருவதற்கு க் குதிரைவையம் coach கேட்கின்றாய் என்று சொன்னாராம் அதற்கு அவன் அப்பா நீங்கள் ஓர் இரப்போன் மகனா யிருந்தீர்கள் அதனால் எங்கும் நடந்துபோனீர்கள் நானோ ஓர் உயர்நிலை மன்றத் தீர்ப்பாளர் High Court Judge மகன் ஆதலால் குதிரைவையம் கேட்கின்றேன் என்றானாம்.

(12) கீழ்வரும் சொற்கட்குப் பொருள் கூறுக துடவை பிறங்கு வெரு கொன்

(13) புலிகடிமால் என்று பெயர் பெற்ற அரசன் யார்

(14) பல ஆண்டுகட்குமுன் சேலங் கல்லூரியில் ஒரு மாணவன் இருந்தானாம் அவன் வகுப்புயர்த்த நாளில் ஆசிரியர் அறைக்குச் சென்று ஆசிரியர் அனைவரையும் நோக்கி ஆசிரியன்மீர் இன்று மாணவரை வகுப்புயர்த்தப் போகின் றீர்கள் மதிப்பாய் என்னையும் உயர்த்திவிடுங்கள் இல்லா விட்டால் இதோ பாருங்கள் கத்தி உங்கள் குடலாயிற்று என் மாலையாயிற்று என்று சொல்வானாம் என்ன துணிகரம் (15) திராவிடமொழிகள் மொத்தம் பதின்மூன்று அவையாவன (16) பொய்சொல்லி வாழ்ந்தவனுமில்லை மெய்சொல்லிக் கெட்டவனுமில்லை என்பது பழமொழி ஆனால் இது எக்காலத்திலாவது முற்றும் உண்மையாயிருந்ததா என்பது ஆராயத்தக்கது