உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




268

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

(3) திருவாளர் அ இராமசாமிக் கவுண்டர், தாழ்ந்த மதிப்பெண் (Marks) பெற்ற மாணவரைத் தம் கல்லூரியிற் சேர்த்து, உயர்ந்த விளைவை உண்டுபண்ணினார்

(4) முனிவர்க்கும் முக்குணவியல்பு முறை மாறிவரும்

(5) இந்திய ஆடவர் முன் தூங்குகின்றனர்; பின் எழுகின்றனர் இந்தியப் பெண்டிர் பின் தூங்குகின்றனர்; முன் எழுகின் றனர்

(6) உடலுழைப் பில்லாதவர்க்கெல்லாம் உடற்பயிற்சி இன்றி யமையாதது

(7) சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் தலைமை நிலையம் திருநெல்வேலி, கீழைத்தேர் வீதி, 24ஆம் எண் கட்டடம் (8) துருக்கி நாட்டுப் பல்கலைக்கழகக் கலைகளையும் (சமயம் மெய்ப்பொருளியல் முதலிய) நூல்களையும் கற்க வரும் இந்திய மாணவர்க்கு மாதம் ஒன்றுக்கு 200 ரூ. விழுக்காடு ஈராண்டு கல்விப்பரிசு வழங்கப் பெறுமென்று, அந் நாட்டரசியலாரால் விளம்பரஞ் செய்யப் பெற்றுள்ளது தமிழ்மொழி யிலக்கியக் கல்விக்கும் இத்தகைய நிலைமை ஏற்படின் எத்துணை நன்றா யிருக்கும்

(9) அரபியர் பாரசீகத்தைக் கைப்பற்றியபின் மதச் சார்பிற் பாரசீக மொழியிற் புகுத்திய அரபிச் சொற்களை யெல்லாம், இற்றைப் பாரசீகர் அகற்றிவிட்டதாகச் சில அறிஞர் கூறுகின்றனர்

(10) உலகிற் செல்வத்தை மதியாதவர் ஓரிருவரே ஆதலால், உலகில் இன்புறவும் மதிப்புப் பெறவும் விரும்புவோர் எல்லாரும் இயன்றவரை பொருளீட்டுதல் இன்றியமை யாதது

(11) குற்றம் செய்வது இருவகை ஒன்று மறைவு இன்னொன்று வெளிப்படை மறைவிற் செய்வது கண்டுபிடிக்கப் பட்டா லொழியக் குற்றமாகாது வெளிப்படையாய்ச் செய்வதே என்றும் குற்றம்.

(12) மக்களெல்லாருக்கும் உண்டியும் உடையும் உறையுளும் கிடைக்கும் காலமே பொற்காலம்

(13) தனக்கொரு நீதியும் பிறருக்கொரு நீதியும் வழங்குகின்றவன் மக்கட் பகைவன்