உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




72

ஒருமை

எ-டு: என்தன் கை

பன்மை

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

என்தன் கைகள்

எம்தம் வீடு

எம்தம் வீடுகள்

முருகன்தன் கை

முருகன்தன் கைகள்

மக்கள்தம் மொழி

மக்கள்தம் மொழிகள்

என்றன், எந்தம், முருகன்றன் எனப் புணர்த்தும் எழுதலாம். உயர்திணைக் கிழமைப்பொருள், பின்வருமாறு மூவகையாய் உணர்த்தப்பெறும்.

(1) வேற்றுமைத் தொகை

எ-டு : முருகன் தேவி, முருகன் தேவிமார்.

(2) சாரியையேற்ற பெயர்

எ-டு : முருகன்தன் தேவி.

மக்கள்தம் உறவினர்.

(3) உருபேற்ற பெயர்

எ-டு : முருகனுடைய தேவி, முருகனுடைய தேவிமார்.

,

சாரியை யேற்ற பெயர் ஒருமை அல்லது பன்மை எண்ணையே உணர்த்தலையும், மற்றவிரண்டும் பொதுவாயிருத் தலையும் நோக்குக.

முன்னின்றைப் பெயரும் (Antecedent)

பதிற்பெயரும் (Pronoun)

வாக்கியங்களில் முன்நிற்கும் பெயர்கட்குப் பதிலாய் வரும் சுட்டுப்பெயர்களுள் (Demonstrative Pronouns), ஒவ்வொன்றும் தன்தன்

முன்னின்றையுடன் திணை பால்

ஒத்திருத்தல்வேண்டும்.

எ-டு : ஆசிரியன் - அவன், இவன்.

எண்

டங்களில்

ஆசிரியை - அவள், இவள்.

ஆசிரியர் – அவர், இவர்.

ஆசிரியர்கள் - அவர்கள், இவர்கள்.

ஆசிரியன்மார் - அவர்கள், இவர்கள்.

முருகன் - அவன், இவன்.

முருகப்பன், முருகையன் - அவன், இவன்.