உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




74

எ-டு:

தன்மை:

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

யான், நான் - என்

யாம் - எம்

யாங்கள், நாங்கள் - எங்கள்

நாம் - நம்

முன்னிலை: நீ, நீன் - உன்,

நின், நுன் (செ.)

நீம், நீர் - நும், (செ.)

உம். நீங்கள் - உங்கள், நுங்கள் (செ.)

படர்க்கை: தான் - தன்

தாம் – தம்

தாங்கள் - தங்கள்.

சிறப்புப்பெயரும் இயற்பெயரும்

இயற்பெயரும் அதற்கு அடைமொழியாக வரும் சிறப்புப் பெயரும், திணை பால் எண் இடங்களில் ஒத்திருத்தல் வேண்டும்.

ஒருமையீற்றில் கூறவேண்டின் எல்லாவற்றையும் ஒருமை யீற்றிலும், உயர்வுப் பன்மையீற்றில் கூறவேண்டின் எல்லாவற்றை யும் உயர்வுப் பன்மையீற்றிலும் கூறவேண்டும்.

இயற்பெயர் பன்மையாயின், சிறப்புப்பெயரும் பன்மையி லிருத்தல் வேண்டும்.

எ-டு : மதுரை ஆசிரியன் பாரத்துவாசி நச்சினார்க்கினியன்

திருவாளன் நெடுஞ்செழியன்

திருவாட்டி இன்பவல்லி

மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்

மதுரைக் கணக்காயன் மகனார் நக்கீரனார்

ஒருமை

திருவாளர் அன்பழகனார்

திருவாட்டியார் கயற்கண்ணியார்

புலவர் கபிலபரணர்

- உயர்வுப் பன்மை

திருவாளன்மார் அன்பழக நெடுஞ்செழியர்

திருவாட்டிமார் அங்கவைசங்கவையார்

பன்மை

மதுரைக் கணக்காயன் மகனார் நக்கீரனார் என்னுந் தொடரில், கணக்காயன் என்பது நக்கீரனாரின் தந்தையைக்