உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தொடரியல்

75

குறித்தலால், அதையும் உயர்வுப்பன்மையிற் கூறத் தேவையில்லை. ஆனால், மதுரைக் கூலவாணிகனார் சீத்தலைச் சாத்தனார் என்றே கூறல் வேண்டும். ஆயினும், கூலவாணிகன் சீத்தலைச்சாத்தன் என்பது ஒரு தொடர்ப் பெயராகக் கொள்ளப்பட்டு ஈற்றில் மட்டும் உயர்வுப் பன்மையீறு ஏற்றதென்று அமைக்கப் பெறும். மருத்துவன் தாமோதரனார் என்பதும் இங்ஙனமே.

திருவாளர் பேரின்பம், திருவாளர் அச்சுதமேனன் எனச் சிறப்புப்பெயரும் இயற்பெயரும் விகுதியொவ்வாது வருவன வெல்லாம் வழுவமைதியாகும்.

குறிப்பு :

(1) உயர்வுப் பன்மையீறு, (i) ஒருமையீற்றிற்குப் பதிலாகப் பன்மையீறு வருவதும், (ii) ஒருமையீற்றொடு பன்மையீறு வருவதும் என இருவகை.

எ.டு: (1) அறிவன்-அறிவர், அரசன் - அரசர். நக்கீரன் - நக்கீரர். (2) அறிவன் - அறிவனார், தகப்பன் – தகப்பனார். நக்கீரன்

(2)

-

– நக்கீரனார், அரசி - அரசியார்.

அரசி நம்பி முதலிய இகரவிகுதிப்

ஒருமையீற்றொடு வடிவங்கொள்ளும்.

பன்மையீறுபெற்றே

-டு : அரசியார், நம்பியார்.

பெயர்கள்,

உயர்வுப்

பன்மை

(3) ஆண் பெண் பாலீறு பெறாத உயர்திணையொருமைப் பெயர்களும், பன்மையீறு பெற்று உயர்வுப் பன்மையாகும்.

-

எ-டு : வள்ளல் வள்ளலார், தாய்-தாயார்.

(4) அப்பன் தகப்பன் (தமப்பன்) முதலிய சில முறைப் பெயர்கள் ஒருமையீற்றொடு பன்மையீறு பெற்றே உயர்வுப் பன்மை வடிவு பெறும்.

எ-டு : அப்பனார், தகப்பனார்.

அப்பர் என்பது திருநாவுக்கரசரைக் குறிக்கும்.

கண்ணப்பன் பொன்னப்பன் முதலிய அடைபெற்ற பெயர்கள், இருவகையிலும் உயர்வுப் பன்மை வடிவு பெறும்.

எ-டு : கண்ணப்பர், கண்ணப்பனார்.

(5) பலர்பால் போன்றே, உயர்வுப் பன்மையும், ஆண்மை பெண்மை பொதுமை என முத்திறப்படும்.