உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




76

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

எ-டு

-டு : மகனார், நம்பியார் - ஆண்மை. மகளார், நங்கையார்

பெண்மை.

அவர், ஒருவர், பெரியார் பொதுமை.

மூவிடப்பெயரும் 'எல்லாம்' என்னும் பெயரும்

மூவிடப்பன்மைப் பெயர்களோடு கூடிவரும் 'எல்லாம் என்னும் முற்றுப்பன்மைப் பெயர், பின்வருமாறு வடிவு கொள்ளும்.

யாம் எல்லேமும், நாம் எல்லாமும் நாம் எல்லோமும்

நீம் எல்லீமும், நீர் எல்லீரும்

அவர் எல்லாரும், மக்கள் எல்லாரும்

அவை எல்லாம், மரங்கள் எல்லாம்

தாம் எல்லாம், தாங்கள் எல்லாம்.

நாமெல்லாரும் நீரெல்லாரும் என எல்லாரும் என்னும் படர்க்கை முற்றுப் பன்மைச்சொல் தன்மை முன்னிலையிலும் வருவது, வழக்குப்பற்றிய வழுவமைதியாகும்.

நாங்கள் எல்லேங்களும், நீங்கள் எல்லீர்களும், அவர்கள் எல்லார்களும் என இரட்டைப்பன்மையிலிருக்க வேண்டியவை; நாங்கள் எல்லேமும் (நாங்கள் எல்லாரும்), நீங்கள் எல்லீரும் (நீங்கள் எல்லாரும்), அவர்கள் எல்லாரும், என ஒற்றைப் பன்மையிலிருப்பதும்; வழக்குப்பற்றிய வழுவமைதியே.

எழுவாயும் பயனிலையும்

எழுவாயும் பயனிலையும் திணை பால் எண் டங்களில் ஒத்திருத்தல் வேண்டும்.

தன்மை : யான் (நான்) வந்தேன்.

யாம் வந்தேம்.

நாம் வந்தோம்.

முன்னிலை :

நீ வந்தை, வந்தனை, வந்தாய்

நீம் வந்தீம், நீர் வந்தீர்.

நீங்கள் வந்தீர்கள்.

(யாங்கள் வந்தேங்கள், நாங்கள் வந்தோங்கள் என்பன

வழக்கற்றன)

படர்க்கை :

அவன் வந்தனன், வந்தான் ஒருவன் வந்தனன், வந்தான்

- ஆண்பால்

மகன் வந்தனன், வந்தான்