உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




78

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

இவற்றிலிருந்து, ஒருவரைக் குறிக்கும் உயர்வுப் பன்மை, ஒற்றைப்பன்மை ரட்டைப்பன்மை என இருவகைப்படு மென்பதும், அவற்றுள் முன்னது சிறிது உயர்வையும் பின்னது மிகுந்த உயர்வையுங் குறிக்குமென்பதும் அறியப்படும்.

மேற்குறித்த மூவகை நிலைமையும் மேலோரை நோக்கிக் கூறியதாகும். கீழோர்க்குள் இழிந்தோன் இல்லாமையின், அவருள் ஒருவனைப்பற்றி அல்லது நோக்கி ஒருவன் கூறும் போது, இழிந்தோன் சொல்லாலேயே கூறல் வேண்டும்.

எ-டு : நீ வா, அவன் சொன்னான்.

பொதுவாக, ஒருமையீற்றுப் பெயர்கள் ஒருமையீற்று வினைகொண்டும், பன்மையீற்றுப் பெயர்கள் பன்மையீற்று வினைகொண்டும், முடிதல்வேண்டும்.

ஆண்பால் விகுதியும் பெண்பால் விகுதியும் இகர விகுதியும் ஒருமையீறாகும். உயர்வுப்பன்மை பன்மையுள் அடங்கும்.

எ-டு : மகள் வந்தாள்.

விறகுவெட்டி வந்தான். ஒருவன் வந்தான்.

பெருமான் வந்தான்.

மகளார் வந்தார்.

- ஒருமையீறு

ஒருவர் வந்தார்.

-பன்மையீறு

பெருமானார் வந்தார்.

சிலர் வந்தார்.

பொதுவாக, பன்மைப்பெயர்களுள் ஒற்றைப் பன்மைப் பெயர் ஒற்றைப் பன்மை வினைகொண்டும் இரட்டைப் பன்மைப் பெயர் இரட்டைப்பன்மை வினைகொண்டும், முடிதல் வேண்டும்.

எ-டு : அவர் வந்தார்.

அவர்கள் வந்தார்கள்.

உயர்வுப்பன்மை வடிவுகொள்ளும்போது சில படர்க்கைப் பெயர்கள் ஒற்றைப்பன்மையே ஏற்கும். அவை இரட்டைப் பன்மைச் சொற்களோடு பொருந்தி வருவது வழக்குப்பற்றிய வழுவமைதியாகும். எ-டு : நீங்கள் ஒருவர். அவர்கள் யார்?

இவர்கள் எம் ஆசிரியரின் மகனார்.