உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




80

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

'அன்' சாரியை பெற்ற ‘அர்' ஈற்று வினையாயின், விகுதிமேல் விகுதி வேண்டியதின்று.

எ-டு : எல்லாரும் வந்தனர்.

அவையார் (சபையார்) வந்தனர்.

அவர்கள் என்னும் உயர்வுச் சொல்லைப் பின்னாற் கொண்ட பெயர்கள், ஒருமையுணர்த்தினும் பன்மை வினைகொண்டே முடிதல் வேண்டும்.

எ-டு : திருமான் அ. இராசாமிக் கவுண்டர் அவர்கள் இன்று மாலை திரு மரியம்மை மண்டபத்தில் திருக்குறளைப்பற்றி ஓர் அரிய சொற்பொழிவாற்றுவார்கள்.

மூவிடப்பெயரும் எண்ணடிப் பெயரும்

மூவிடப்பெயர்களும் எண்ணடிப் பெயர்களைப் பயனிலை யாகக் கொண்டு முடியின், பின்வருமாறு முடியும்:

நான் ஒருவன், ஒருத்தன்

நீ ஒருவன், ஒருத்தன்

அவன் ஒருவன், ஒருத்தன்

நான் ஒருத்தி

நீ ஒருத்தி

அவள் ஒருத்தி

அவர் ஒருவர்

நீர் ஒருவர்

நாம் இருவர், சிலர், பலர் நீர் இருவர், சிலர், பலர்

அவர் இருவர், சிலர், பலர்

அரசர் இருவர், சிலர், பலர்

அது ஒன்று

ஒன்றன்பால்

அவை இரண்டு, சில, பல -

-

- ஆண்பால்

-பெண்பால்

- உயர்வுப் பன்மை

பலர்பால்

பலவின்பால்

வை இக்கால வழக்கிலுள்ளவை. இவற்றுள் படர்க்கை முடிபெல்லாம் வழாநிலையும், ஏனை யீரிட முடிபுகளும் வழக்குப்

பற்றிய வழுவமைதியும், ஆகும்.

தன்மை முன்னிலைகளில் வழாநிலையாய் முடிவன வருமாறு:

நான் ஒருவனேன், ஒருத்தனேன்

நீ ஒருவனை, ஒருத்தனை

-

ஆண்பால்