உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தொடரியல்

நான் ஒருத்தியேன் நீ ஒருத்தியை

நீர் ஒருவரீர் - உயர்வுப் பன்மை

}

-பெண்பால்

யாம் இருவேம் (இருவரேம்), சிலரேம், பலரேம் நாம் இருவோம் (இருவரோம்), சிலரோம், பலரோம் நீம் இருவீம் (இருவரீம்), சிலரீம், பலரீம்

நீர் இருவீர் (இருவரீர்), சிலரீர், பலரீர்

பலர்பால்

-

81

இவை இக்காலத்து வழக்கற்றன; ஆயினும் உயரிய இலக்கிய நடையில் ஆளப்பெறலாம்.

மூவிடப்பெயரும் உண்மைச்சொல்லும்

மூவிடப் பெயர்களும் உண்மைச் சொல்லைப் பயனிலையாகக் கொண்டு முடியும்போது, பின்வருமாறு முடியும்:

தன்மை

நான் உள்ளேன், உளேன்

யாம் உள்ளேம், உளேம், உளம்; நாம் உள்ளோம், உளோம், உளம்

முன்னிலை : நீ உள்ளை, உளை, உள்ளாய், உளாய்

நீம் உள்ளீம், உளீம்; நீர் உள்ளீர், உளீர்

படர்க்கை : அவன் உள்ளான், உளான், உளன்

அவள் உள்ளாள், உளாள், உளள்

அவர் உள்ளார், உளார், உளர்

அது உள்ளது, உளது, உண்டு

அவை உள்ளன; உள்ள, உள

ஒன்றன்பாற்குரிய உண்டு என்னும் சொல், இன்று இருதிணை ஐம்பால் மூவிடங்கட்கும் பொதுவாம்.

மூவிடப்பெயரும் இன்மைச்சொல்லும்

மூவிடப்பெயர்களும் இன்மைச் சொல்லைப் பயனிலையாகக் கொண்டு முடியும்போது, பின்வருமாறு முடியும்.

தன்மை : நான் இல்லேன், இலேன்

யாம் இல்லேம், இலேம், இலம்; நாம் இல்லோம், இலோம், இலம்

முன்னிலை : நீ இல்லை, இலை, இல்லாய், இலாய்

நீம் இல்லீம், இலீம்; நீர் இல்லீர், இலீர்