தொடரியல்
நான் ஒருத்தியேன் நீ ஒருத்தியை
நீர் ஒருவரீர் - உயர்வுப் பன்மை
}
-பெண்பால்
யாம் இருவேம் (இருவரேம்), சிலரேம், பலரேம் நாம் இருவோம் (இருவரோம்), சிலரோம், பலரோம் நீம் இருவீம் (இருவரீம்), சிலரீம், பலரீம்
நீர் இருவீர் (இருவரீர்), சிலரீர், பலரீர்
பலர்பால்
-
81
இவை இக்காலத்து வழக்கற்றன; ஆயினும் உயரிய இலக்கிய நடையில் ஆளப்பெறலாம்.
மூவிடப்பெயரும் உண்மைச்சொல்லும்
மூவிடப் பெயர்களும் உண்மைச் சொல்லைப் பயனிலையாகக் கொண்டு முடியும்போது, பின்வருமாறு முடியும்:
தன்மை
- நான் உள்ளேன், உளேன்
யாம் உள்ளேம், உளேம், உளம்; நாம் உள்ளோம், உளோம், உளம்
முன்னிலை : நீ உள்ளை, உளை, உள்ளாய், உளாய்
நீம் உள்ளீம், உளீம்; நீர் உள்ளீர், உளீர்
படர்க்கை : அவன் உள்ளான், உளான், உளன்
அவள் உள்ளாள், உளாள், உளள்
அவர் உள்ளார், உளார், உளர்
அது உள்ளது, உளது, உண்டு
அவை உள்ளன; உள்ள, உள
ஒன்றன்பாற்குரிய உண்டு என்னும் சொல், இன்று இருதிணை ஐம்பால் மூவிடங்கட்கும் பொதுவாம்.
மூவிடப்பெயரும் இன்மைச்சொல்லும்
மூவிடப்பெயர்களும் இன்மைச் சொல்லைப் பயனிலையாகக் கொண்டு முடியும்போது, பின்வருமாறு முடியும்.
தன்மை : நான் இல்லேன், இலேன்
யாம் இல்லேம், இலேம், இலம்; நாம் இல்லோம், இலோம், இலம்
முன்னிலை : நீ இல்லை, இலை, இல்லாய், இலாய்
நீம் இல்லீம், இலீம்; நீர் இல்லீர், இலீர்