உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தொடரியல்

தன்மை : நான் காணேன்.

முன்னிலை

யாம் காணோம், நாம் காணோம். : நீ காணாய்,

நீம் காணீம்; நீர் காணீர்.

படர்க்கை : அவன் காணான்.

அவள் காணாள்.

அவர் காணார்.

83

அது காணாது.

அவை காணா.

காணோம் என்னும் தன்மைப் பன்மைச் சொல்லைக் காணேன் என்னும் தன்மை யொருமைப் பொருளில் அதுவும் காணும் என்னும் கொச்சை வடிவில் -வழங்குவது இருமடி வழுவாகும்.

பெண்மகன், பெட்டைப்பசன் என்னும் பெயர்களின் முடிபு

று

சிறு பெண்பிள்ளையைப் பெண்மகன் என்று மாறோக்கத் தாரும், பெட்டையப்பசன் என்று வடார்க்காட்டாரும், சொல்வது வழக்கம். இவ்விரு கூட்டுப் பெயர்களும், வருமொழிக் கேற்ப ஆண்பால் வினைகொண்டு முடியாது நிலைமொழிக்கேற்பப் பெண்பால் வினைகொண்டு முடியும்.

எ-டு : பெண்மகன் வந்தாள்.

பெட்டைப்பசன் விளையாடுகிறாள்.

[மாறோக்கம் கொற்கையைச் சூழ்ந்த வட்டாரம். பையன் பயன் - பசன்.]

தெய்வப்பெயர் முடிபு

முழுமுதற் கடவுட் பெயரை, ஆண்பால் வினைகொண்டும் உயர்வுப் பன்மை வினைகொண்டும் ஒன்றன்பால் வினை கொண்டும் முடிக்கலாம்.

எ-டு : கடவுள் இருக்கிறான், இருக்கிறார், இருக்கிறது.

தெய்வம் இருக்கிறான், இருக்கிறார், இருக்கிறது.

தெய்வப் பெயர்கள் விகுதி பெற்றவையாயின், அவ்வவ் விகுதிக்கேற்ற வினைகொண்டு முடியும்.

எ-டு : ஆண்டவன் வந்தான், ஆண்டவர் வந்தார்.

தேவன் வந்தான், தேவி வந்தாள்.

தேவர் வந்தார், தேவர்கள் வந்தார்கள்.

தேவியர் வந்தார், தேவிமார் வந்தனர் (வந்தார்கள்).