உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

இடையன், வீடுபோ-ச் சேர்ந்தவுடன், அவன் எதிர்பார்த்ததற்கு மாறாக, அவன் மனைவி கொஞ்சம் மொச்சைக்கொட்டையைப் பச்சை யா-த் தின்றுவிட்டதனால், பொறுக்கமுடியாத வயிற்றுவலி வந்து உருண்டு புரண்டு அலறிக்கொண்டு கிடப்பதைக் கண்டான். உடனே அவன் கோபந்தணிந்து, அவளுக்குச் செ-யவேண்டிய சில மருத்துவ முறைகளைச் செ-து, அதன்பின்பு சோறு சமைத்துச் சாப்பிட்டுவிட்டு, மிகக் காலந்தாழ்த்துவிட்டதனால் பரபரப்புடன் காட்டிற்குத் திரும்பி னான்.

ஆட்டு மந்தையை அடைந்தவுடன் ஆடுகளையெல்லாம் எண்ணிப்பார்த்துச் சரியாயிருக்கக்கண்டு, தலையாரியின் காவல்தான் அதற்குக் காரணமென்று கருதி, ஒரு கொழுத்த நொண்டியாட்டைத் தூக்கிக்கொண்டுபோ-த் தலையாரியிடங் கொடுத்து, "இது நல்ல கொழுத்த ஆடு. கறி மிகச் சுவையாயிருக்கும். உனக்கும் உன் சுற்றத் தார்க்கும் ஒரு சிறந்த விருந்திற்குக் காணும். நான் இல்லாத சமை யத்தில் என் ஆடுகளைச் சரியா-க் கவனித்துக் கொண்டதனால் உனக்கு இதை நன்கொடையாகக் கொடுக்கிறேன், எடுத்துக்கொள்,” என்று சொன்னான். உடனே தலையாரி, தான் அவ் வாட்டின் காலை ஒடித்து விட்டதாக இடையன் தன்மேற் குற்றஞ்சாட்டுகிறான் என்று கருதிக் கொண்டு, "யாரடா உன் ஆட்டைக் கால் ஒடித்தது? நான் காலையிலிருந்து இவ்விடத்தைவிட்டு அசையவில்லை. உன் ஆட்டுக் காலை ஒடித்தேன் என்று சொல்லுகிறா-. வலியச் சண்டைக்கு வரு கிறாயா? வா," என்று சொல்லித் தன் வேட்டியை இறுக்கிக் கட்டினான்.

பார்த்துச் சற்று

இடையன் தலையாரியின் கோபநிலையைப் விலகினபோது, ஒருவன் குதிரைமே லேறிக்கொண்டு அவ் வழியா வந்தான். இடையன் அவனை நிறுத்தி அவனிடம் தன் ஆவலாதியைச் சொன்னான். தலையாரியும் இடையனைப்பற்றி அவனிடம் முறை யிட்டான். அக் குதிரையாளனும் அவர்களைப்போன்றே செவிடனா யிருந்ததனால், அவர்கள் சொன்னதில் ஒன்றைக்கூட அறிந்துகொள் ளாமல் “ஆம்; நீங்கள் சொல்வது சரிதான். இக் குதிரை எனதன்று. நான் வருகிறவழியில் இது தனியா- மே-ந்துகொண்டிருந்தது. நான் ஓர் ஊருக்கு விரைவா-ச் செல்லவேண்டியிருப்பதால், இதன்மே லேறி வந்தேன். இஃது உங்களுடையதாயின் பெற்றுக்கொள்ளலாம். யாதொரு