உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரையியல்

89

ஆடுகள் சரியாயிருத்தல் கண்டு இடையன் தலையாரிக்கு ஒரு நொண்டியாட்டைக் கொடுத்தல் - தலையாரி தான் அவ் வாட்டின் காலை ஒடிக்கவில்லையென்று சண்டைக்கு வரல் - இருவரும் அவ் வழியே சென்ற ஒருவனிடம் முறையிடல்

குதிரையேறிச் செவிடனாதலால்

அவனும்

இடையனும் தலையாரியும் குதிரையாளன் தமக்கு மாறாகத் தீர்ப்புச்செ-ததாகக்கொண்டு அவனைத் திட்டுதல் - மூவரும் அவ்வழியே வந்த ஒரு பார்ப்பானிடம் முறையிடல் பார்ப் பானும்

செவிடனாதலால், அவர்களைத் தன் மனைவி அனுப்பின தாகக் கருதித்தான் இனி, அவளுடன் கூடி வாழமுடியாதென்று சொல்லித் தன் காசியாத்திரையைத் தெரிவித்தல்.

இந் நிலையில் தொலைவில் ஆள்கள் வரல்

குதிரையேறி வந்தவன் குதிரையை விட்டுவிட்டு ஓடல் இடையன் ஆடுகளிடம் தலையாரி இடையனைத் தண்டிக்கக் கருதி நொண்டி

செல்லல்

யாட்டை யெடுத்துச் செல்லல்.

பார்ப்பான் அடுத்தவூர்ச் சத்திரத்தில் இராத்தங்கல்

காலையில்

உறவினர் வந்து அவனை அழைத்துச் செல்லல்.

முழுக்கதை

ஓர் ஊர்ப்புறத்துக் காட்டில், ஒரு செவிட்டிடையன் வழக்கமா-த் தன் ஆடுகளை மே-த்துக்கொண்டிருந்தான். ஒருநாட் காலையில் மிக நேரமாகியும், அவன் மனைவி சாப்பாடு கொண்டுவரவில்லை. பசி கடுகுதலால், அவன் தானே வீடுபோ-ச் சாப்பிட எண்ணி, பக்கத்தில் புல் செதுக்கிக் கொண்டிருந்த அவ்வூர்த் தலையாரியை, தான் வீடு சென்று திரும்பும்வரை தன் ஆடுகளைப் பார்த்துக்கொள்ளச் சொன் னான். அத் தலையாரியும் செவிடனாகையால், இடையன் சொன் னதைத் தவறாக உணர்ந்து, "இவ்வளவு நேரம் நான் கட்டப்பட்டுச் செதுக்கிய புல்லை நீ எப்படிக் கேட்கலாம்? என் ஆவு பட்டினி கிடந்து சாக உன் ஆடுகள் மட்டும் கொழுக்க வேண்டுமா? போ, இல்லா விட்டால் விட்டால் அடித்து விடுவேன்," என்று சொல்லித் தன் கையை வீசி னான். இடையன், அக் கைவீச்சைத் தன்னை வீடுபோகச் சொன்ன தற்கு அடையாளமாகக் கருதிக்கொண்டு, போனவுடன் தன் மனைவியை நையப் புடைக்கவேண்டு மென்னுங் கருத்தினனா-, வேகமா-ச் சென்றான்.