உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

2.

3.

ஒரு கதைக்கு அதன் தலைமையான உறுப்பிலிருந்தாவது, முக்கிய நிகழ்ச்சியிலிருந்தாவது, முடிவி லுணர்த்தப்பெறும் படிப்பனையி லிருந்தாவது, தலைப்பைத் தெரிந்துகொள்ளலாம்.

சொல்லாகவேனும்,

அது தனிச்

தொடர்மொழியாகவேனும், பழமொழியாக

வேனும், மேற்கோள் தொடராகவேனும் இருக்கலாம்.

சட்டகக் குறிப்புகளில் ஒன்றையும் விடாது, ஒழுங்காகக் கோவை பட வரைதல் வேண்டும்.

4. குறிப்புகளை

இயற்கையொடு

பொருந்த ஒன்றோடொன்று

இசைத்தல் வேண்டும். வழக்கமா-ச் சொல்லப்படும் முறைக்கு மாறாகக் கதை சொல்லினும் குற்றமில்லை.

5. சிறு நிகழ்ச்சிகளைப்பற்றி விரிவாகவும் பெருநிகழ்ச்சிகளைப் பற்றிச் சுருக்கமாகவும் வரையாது, அவ்வந் நிகழ்ச்சியைப்பற்றி அதற்கேற்ற அளவு வரைதல் வேண்டும்.

6. வேண்டுமிடமெல்லாம் உரையாட்டு முறையைக் கையாளலாம்.

7. கதையின் முடிவு, ஒரு சிறந்த உண்மையை அல்லது நீதியைப் புகட்டுவதா யிருத்தல் வேண்டும்.

(i) நிறைசட்டகம்

ஒரு செவிட்டிடையன் ஊர்ப்புறத்தில் ஆடுமே-த்தல் அவன் மனைவி சாப்பாடு கொண்டுவராமை தலையாரி அருகில் புல் செதுக்கிக்கொண்டிருத்தல் இடையன் வீட்டிற்குச் செல்ல எண்ணித் தலையாரியைத் தன் ஆடுகளைப் பார்த்துக்கொள்ளச் சொல்லுதல் தலையாரியும் செவிடனாதலால், தான் செதுக்கின புல்லைக் கேட்க இடையனுக்கு நியாயமில்லையென்று கோபித்தல் இடையன் தலை யாரி இசைந்ததாகக் கருதிக்கொண்டு மனைவிமேற் கடுங்கோபத் தொடு வீடு செல்லல்.

வீட்டில் இடையன் மனைவி மொச்சைக்கொட்டையைப் பச்சை யா-த் தின்றுவிட்டு வயிற்றுவலியால் உருண்டு புரள்தல் - இடையன் அவளுக்கு மருந்து கொடுத்தபின் சோறுசமைத்துச் சாப்பிட்டுவிட்டுத் திரும்புதல்.