உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரையியல்

87

றாதலின், அதை விட்டுவிட்டுத் தெரியாத கதைவரைவயே மேல் வகுப்பு மாணவர் பயிலுதல் வேண்டும். தெரியாத கதைகளைச் சட்டகக் குறிப்பு (Hints and Outline) இல்லாமல் வரைவது மாணவர்க்கு அரிதாகவும் இயலாததாகவு மிருக்குமாதலின், நிறைவாகவோ குறை வாகவோ சட்டகக் குறிப்புக் கொடுக்கப்படல்வேண்டும். தெரியாத கதைகளுள், அரைகுறையா-த் தெரிந்தவற்றை முன்னும் முற்றும் தெரி யாதவற்றைப் பின்னும் வரைந்து, பயிலவேண்டும்.

குறிப்பு: தெரிந்த கதைகளைத் துவக்கப்பள்ளி நடுநிலைப்பள்ளி மாணவரும், அரைகுறையாகத் தெரிந்த கதைகளைச் சட்டகக் குறிப்புக் கொண்டு உயர்நிலைப்பள்ளி மாணவரும், தெரியாத கதைகளைச் சட்டகக் குறிப்புக் கொண்டு கல்லூரி மாணவரும், சட்டகக் குறிப் பின்றிக் கொடுக்கப்பட்ட தலைப்பிற்கேற்ற புனைவுக்கதைகளை அல்லது கட்டுக்கதைகளைப் புலவர் வகுப்பு மாணவரும், வரைந்து பயிலலாம்.

சட்டகக் குறிப்பு வகைகள்

1. நிறை சட்டகம் (Full Outline)

2. வெறுஞ் சட்டகம் (Bare Outline)

3. குறை சட்டகம் (Incomplete Outline) 4. குறைகதை (Unfinished Story)

எனச் சட்டகக் குறிப்பு நால்வகைப்படும்.

கதையை எவரும் அறிந்துகொள்ளுமாறு எல்லா நிகழ்ச்சிகளை யுங் குறிப்பது நிறைசட்டகம்; முக்கியமான அல்லது பருப்பொருளான நிகழ்ச்சிகளை மட்டுங் குறிப்பது வெறுஞ் சட்டகம்; கதையின் முற் பகுதிக்கு மட்டுங் குறிப்புகள் தருவது குறை சட்டகம்; கதையின் முற் பகுதியை மட்டும் வரைந்து விட்டுவிடுவது குறைகதை. நிறைசட்டகம் முற்றுந் தெரியாக் கதைக்கும், வெறுஞ்சட்டகம் சற்றே தெரிந்த கதைக்கும், குறைசட்டகம் அரைகுறையாத் தெரிந்த கதைக்கும்,குறைகதை பிற்பகுதியை ஊகித்தறியக்கூடிய கதைக்கும் ஏற்றனவாம்.

1.

சட்டகப்படி கதை வரைவதற்கான குறிப்புகள்

ஒரு கதைச்சட்டகத்தைப் படித்தபின், அக் கதைக்குரிய நிகழ்ச்சிக ளெல்லாவற்றையும் சிந்தித்துத் தெளிவாக மனத்திலமைத்துக் கொண்டு, அதன்பின்பு கதை வரையத் தொடங்குதல் வேண்டும்.