உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

முன்னுரைக்

4. கதை வரைவு (Story Writing)

குறிப்புகள்

கதைகள், மிக எளியனவாகவும் எல்லாருஞ் சொல்லக் கூடியன வாகவுமிருந்தாலும், கற்றோர்க்கும் மற்றோர்க்கும் இன்பம் ஊட்டுவ தாலும், சிறந்த உண்மைகளையும் நீதிகளையும் கேட்போர் மனத்திற் பசுமரத்தாணிபோற் பதியச் செ-வதாலும், சிறுகாவியங்கட்கும் பெருங் காவியங்கட்கும் அடிப்படையா- அமைவதாலும், பேதையரையும் மேதையராக்கும் திறத்தனவாதலாலும், ஒழுக்கத்திற்கு ஏதுவாயிருப் பதாலும், மக்கள் வாழ்க்கைக்கு மிக வேண்டியனவாகக் கருதப்படும். கதைகள்,

1.

உள்ளோன் தலைவனாக உள்ளதுரைப்பது, 2. உள்ளோன் தலைவனாக இல்லதுரைப்பது, 3. இல்லோன் தலைவனாக உள்ளதுரைப்பது, 4. இல்லோன் தலைவனாக இல்லதுரைப்பது, என நான்கு வகைப்படும்.

இவற்றுள், முதலது உண்மைக்கதையும், ஏனைய கட்டுக்கதையும் ஆகும். உண்மைக் கதைவரைவு எழுதத் தெரிந்த எல்லார்க்கும் இயலும். கட்டுக்கதை வரைவோ பெரும்பாலும் புலமையுடை யார்க்கே இயலும்.

கதைகள்,

1. பழங்கதை,

2. புதுக்கதை

மீண்டும்,

என இருவகைப்படும்.

ஒருவர் நெடுங்காலத்திற்கு முன்பே சொன்ன அல்லது எழுதிய கதை பழங்கதை; அங்ஙனமன்றி, புதிதாகச் சொல்லப்படும் அல்லது எழுதப்படும் கதை புதுக்கதை. இவற்றுள், புதுக்கதை உள்ளோன் தலை வனாக உள்ள துரைப்பதாயின், கீழ்வகுப்பு மாணவரும் வரைதற்கியலும். ஏனைய மூன்றனுள் ஒன்றாயின், மேல்வகுப்பு மாணவர்க்கே அவருள்ளும் சிந்தனையாற்ற லுடையார்க்கே - இயலும்.

இனி, 1. தெரிந்த கதை, 2. தெரியாத கதை என்றும், கதைகளை இருவகையா வகுக்கலாம். தெரிந்த கதைவரைவு சிறந்த பயிற்சியன்