உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரையியல்

91

தடையுமில்லை." என்று சொன்னான். உடனே இடையனும் தலையாரி யும் தமக்கு மாறாகத் தீர்ப்புக் கூறியதாகத் தனித்தனியே எண்ணிக் கொண்டு, அக்குதிரையாளனைக் கண்டபடி திட்டத் தொடங்கினார்கள்.

என்

அச் சமையம் ஒரு பார்ப்பான் அவ்வழியே வந்தான். அவனே தங்கள் வழக்கைக் கேட்டுத் தீர்ப்புக்கூறத் தக்கவன் என்று கருதி, அம் மூவரும் அவனிடம் ஒருங்கே தம் செ-திகளைத் தொண்டை கம்மக் கத்திச் சொன்னார்கள். அப் பார்ப்பானும் அவர்களைப் போன்றே செவிடனாயிருந்ததனால், "ஒகோ, செ-தி தெரிந்துவிட்டது. மனைவிதான் உங்களை அனுப்பி என்னைத் தடுக்கச் சொல்லியிருக் கிறாள். நான் இனிமேல் ஒருநொடியும் அவளோடு கூடி வாழ முடியாது. நான் அப் பிடாரியைக் கொண்டதிலிருந்து பட்ட பாடுகளும் செ-த பாவங்களும் அவ்வள விவ்வளவல்ல. அவற்றையெல்லாம் தொலைத்து மறுபிறப்பிலாவது நல்வாழ்வு வாழும்படி காசிக்குச் சென்று அங்கேயே என் எஞ்சிய காலத்தைக் கழிக்கப்போகின்றேன். என்னைத் தடுக்காதீர் கள். இக் காரியத்தில் நீங்கள் வெற்றியடையவே மாட்டீர்கள். இது திண்ணம்” என்று சொல்லி முடித்தபோது, தொலைவில் சில ஆள்கள் வருவதை அந் நால்வருங் கண்டார்கள்.

குதிரைமேலிருந்தவன், குதிரைக்காரர்தாம் குதிரையைத் தேடி வருகிறார்கள் என்று கருதிக்கொண்டு, குதிரையைவிட்டுக் கீழிறங்கி ஓட்டம் பிடித்தான். ஆடுகள் அதற்குள் சற்று அப்பாற் போ- விட்ட தனால், இடையன் அவற்றிடம் சென்றுவிட்டான். தலையாரி, இடையன் செ-த குற்றத்திற்கு அவனைத் தண்டிக்க வேண்டுமென்று அங்கே கிடந்த நொண்டியாட்டைத் தூக்கிக்கொண்டு வீட்டிற்குப் போ- விட்டான். பார்ப்பான் தன் வழியே சென்று, பக்கத்தூரிலுள்ள சத்திரத்தில் இராத்தங்கினான்.

இரவில் நல்ல தூக்கமும் இளைப்பாறலு மிருந்தததனால், பார்ப் பான் காலையில் விழித்தெழுந்தபோது, அவன் மனம் கோபம் நீங்கி அமைதியடைந்திருந்தது. அப்போது அவன் உறவினரும் ஊரா ருமான பார்ப்பனர் பலர் வந்து, அவனைப் பலவாறு தேற்றி, இனி, அவனுடைய மனைவி மீறி ஒழுகாதவாறு தாம் பார்த்துக்கொள்வதாக உறுதிகூறி, அவனை ஊருக்கு அழைத்துக்கொண்டுபோ- மனைவி யுடன் சேர்ந்து வாழும்படி செ-தார்கள்.

செவிடர் கூடிச்செ-யும் காரியம் சீர்கெடும்.