உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

(ii) வெறுஞ்சட்டகம்

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

(1) ஒரு வீட்டில் ஒரு பெண்பிள்ளை இறத்தல்.

(2) ஒரு போலித்துறவி அப் பெண்பிள்ளையின் தாயை ஏமாற்றி அப் பிள்ளையின் அணிகலன்களைக் கொண்டு செல்லுதல்.

(3) அப் பெண்பிள்ளையின் தந்தை அப் போலித் துறவியைப் பிடிக்கப் போதல்.

(4) அப் போலித் துறவி அத் தந்தையின் குதிரையைக் கவர்ந்து செல்லல்.

முழுக்கதை

ஒரு வீட்டில் ஒரு நல்ல பெண்பிள்ளை இருந்தாள். அவளுடைய பெற்றோர் அவளை அருமையாகப் போற்றி வளர்த்தார்கள். ஒரு நாளும் அவளைவிட்டு அவர்கள் பிரிந்ததில்லை. எங்குச் சென்றாலும், அவளையும் அவர்கள் உடன்கொண்டே செல்வது வழக்கம். சிறந்த ஆடையணிகளெல்லாம் அவளுக்கு அவர்கள் வாங்கிக் கொடுத்திருந் தார்கள். மணப்பருவம் வந்திருந்த சமையத்தில், அவள் திடுமென்று நோப்பட்டு இறந்துபோனாள். அவளுடைய பெற்றோர் ஆற்றொ ணாத் துயரத்தில் மூழ்கினார்.

66

ஓராண்டு கழித்து, அக் குடும்பத்தின் நிலைமையை அறிந்திருந்த ஒரு போலித்துறவி, தந்தையாரில்லாத சமையம் பார்த்து அவ் வீட்டிற்கு வந்தான். தாயார் அவரை வணக்கம் செ-து வரவேற்று, “அடிகாள்! மிகக் களைத்துப் போயிருக்கின்றீர்களே! எங்கிருந்து வருகின்றீர்கள்?” என்று கேட்டார். அதற்கு அவன் "அம்மா! நான்கற்கு வுலகஞ் சுற்றிக் கடைசியில் வீட்டுலகத்திலிருந்து வருகிறேன்" என்றான். உடனே தாயார் 'அடிகாள்! வீட்டுலகத்திலிருந்தா வருகின்றீர்கள்? அப்படி யானால், என் அருமைக் கண்மணி அங்கிருப்பாளே! அவளை நீங்கள் பார்த்தீர்களா?" என்று ஆவலா-க் கேட்டார். "ஆமாம், பார்த்தேன்" என்று சற்றுந் தயங்காமல் சொன்னான் அப் போலித் துறவி. "அவள் எப்படியிருக்கின்றாள்? எங்களைப்பற்றி ஏதாவது வினவினாளா? எங்களுக்கு ஏதேனும் செ-தி சொல்லிவிட்டாளா?" என்று தாயார் கேட்டதற்கு, "அவள் மிக்க வருத்தத்தோடிருக்கின்றாள். அவள் தன்னுடைய அணிகலன்களை யெல்லாம் இங்கே வைத்துவிட்டுப் போ-விட்டாளாம். அவற்றை உடனே அனுப்பச் சொன்னாள். அவை போ-ச் சேர்ந்தால்தான் அவள் மகிழ்ச்சியடைவாள்," என்று அப்