உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரையியல்

93

போலித்துறவி சொன்னான். உடனே, தாயார் அவள் அணிகலன் களையெல்லாம் ஒரு சிறு மூட்டையாகக் கட்டி அவளிடம் சேர்க்கும் படி அவனிடங் கொடுத்தாள். அவன் அதுவே சமையம் என்று தாயாரிடம் விடைபெற்றுக் கொண்டு விரைந்து சென்றான்.

66

சிறிதுநேரங் கழித்துத் தந்தையார் வந்தார். தாயார் அவரிடம் நடந்ததைச் சொன்னார். அவர் ‘அடி பேதா-! துறவியிடம் ஏன் அணிகலன்களைக் கொடுத்தா-? வீட்டுலகம் சென்று இங்குத் திரும்பி னவன் யார்? உன்னை ஏமாற்றிவிட்டல்லவா ஒருவன் போயிருக் கின்றான்? அருமை மகளை இழந்ததுமன்றி அவள் நினைவிற்கு வைத்திருந்த அணிகலன்களையுமா பறிகொடுப்பது?' என்று வருந்திக் கொண்டிருந்தபோது; "சற்று முன்புதான் அத் துறவி போனான். வேகமா-ச் சென்றால் இப்போதே அவனைப் பிடித்துக் கொள்ளலாம்” என்று தாயார் சொல்ல; தந்தையார் உடனே தம் குதிரையேறிப் புறப்பட்டார்.

சிறிது தொலைவு சென்றபின் தந்தையார் அப் போலித் துறவி யைத் தொலைவிற் கண்டு அவனை நிற்கச் சொன்னார். அவன் தன்னால் இயன்றவரை வேகமா- ஓடிக் கடைசியில் ஒரு மரத்தின் மேல் ஏறினான். தந்தையார் குதிரையை மரத்தடியில் நிறுத்திவிட்டு, அப் போலித் துறவியைப் பிடிக்கத் தாமும் மரத்தில் ஏறினார். அப்போது அவன் திடுமென்று குதிரையின்மேற் குதித்து, அதை வேகமா-த் தட்டிவிட்டான். அது காற்றா-ப் பறந்தது. தந்தையார் மரத் தினின்று கீழிறங்கி, நிலைமையை உணர்ந்துகொண்டு, "துறவி யாரே! தாயார் அணிகலன் கொடுத்தாரென்றும், தந்தையார் குதிரை கொடுத்தா ரென்றும், என் மகளிடம் போ-ச் சொல்லும்,” என்று உரக்கக் கத்தி விட்டு, வருத்தத்துடன் கால்நடையா வீட்டிற்குத் திரும்பி வந்தார்.

போலித் துறவியாரை நம்புதல் கூடாது.

(iii) குறைசட்டகம்

ஒரு விறகுவெட்டியின் கோடரி ஓர் ஆற்றில் விழுதல் ஒரு விண்ணவன் முழுகித் தங்கக் கோடரி யெடுத்தல் விறகுவெட்டி அஃதன்று எனல் விண்ணவன் வெள்ளிக் கோடரி யெடுத்தல் விறகுவெட்டி அதுவுமன்று எனல்

விண்ணவன் இரும்புக் கோடரி

யெடுத்தல் - விறகுவெட்டி அதுவே யெனல் விண்ணவன் அத னொடு ஏனை யிரண்டையும் அளித்தல்.