உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

முழுக்கதை

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

ஓர் ஊரில் ஓர் உண்மையுள்ள விறகுவெட்டியிருந்தான். அவன் ஒரு நாள் ஒரு காட்டிற்குச் சென்று விறகுவெட்டிக் கொண்டிருந்த போது, கோடரி நழுவி அருகிலுள்ள கானாற்றில் விழுந்துவிட்டது. அவ்வாறு மிக ஆழமாயிருந்ததனாலும், மிக வேகமா- ஓடிக் கொண்டி ருந்ததனாலும், அவனால் அதை எடுக்க முடியவில்லை. ஆதலால், என்ன செ-வதென்று தெரியாமல், மிக்க தெரியாமல், மிக்க வருத்தத்தோடு அங்கு உட்கார்ந்து கொண்டிருந்தான்.

99

அப்போது ஒரு விண்ணவன் தோன்றி "ஏனப்பா! வருத்தத் தோடிருக்கின்றா-?” என்று வினவினான். அதற்கு விறகுவெட்டி,"என் கோடரி ஆற்றில் விழுந்துவிட்டது. அதை யெடுக்க முடியவில்லை.' யென்று சொன்னான். உடனே, விண்ணவன் ஆற்றிற்குள் முழுகி ஒரு தங்கக்கோடரியை எடுத்துக் கொண்டுவந்து, "இதுவா உனது?" என்று கேட்டான். விறகுவெட்டி விறகுவெட்டி "அதுவன்று எனது” என்றான். பின்பு விண்ணவன் மீண்டும் முழுகி ஒரு வெள்ளிக் கோடரியை எடுத்துக் கொண்டுவந்து, "இதுவா உனது?" என்று கேட்டான். விறகு வெட்டி “அதுவும் எனதன்று.” என்றான். பின்பு, மூன்றாம் முறையும் விண்ணவன் முழுகி ஓர் இருப்புக் கோடரியைக் கொண்டுவந்து காட்டி, "இதுவா உனது? பார்" என்றான். விறகுவெட்டி “அதுதான் எனது” என்று சொல்லி, அதை ஆவலோடு வாங்கினான். விண்ணவன் அவ னுடைய உண்மையை மெச்சி, ஏனை யிருகோடரிகளையும் அவனுக்குப் பரிசாக அளித்து மறைந்தான்.

விறகுவெட்டி வேலை முடிந்தவுடன் வீடு திரும்பினான். இச் செ-தியைக் கேள்விப்பட்ட இன்னொரு பேராசைக்காரனும் பொ-ய னுமான விறகுவெட்டி, மறுநாள் அதே இடத்திற்குச் சென்று, தன் கோடரியை வேண்டுமென்று ஆற்றில் போட்டுவிட்டு, அங்கே உட்கார்ந்து விண்ணவன் வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருந் தான். அவன் எதிர்பார்த்த வண்ணமே விண்ணவன் தோன்றி, அவன் வருத்தத்திற்குக் காரணம் வினவினான். அவன் தன் கோடரி ஆற்றில் விழுந்துவிட்டதாகச் சொன்னான். உடனே, விண்ணவன் ஆற்றில் முழுகி ஒரு தங்கக்கோடரியை எடுத்துக் கொண்டுவந்து, "இதுவா உனது? என்று கேட்குமுன்னரே, பேராசைக்காரன் "அதுவே எனது, அதுவே