உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரையியல்

95

எனது, என்று கத்தினான். அன்றே விண்ணவன் மறைந் தான். அதன் பின் அவனைக் காணவேயில்லை. பேராசைக்காரன் இருட்டு மட்டும் விண்ணவனை வீணாகக் கத்தியழைத்துக் கொண்டி ருந்து விட்டுப் பின்பு வெறுங்கையா வருத்தத்தோடு வீட்டிற்குத் திரும்பி வந்தான்.

உண்மை உயர்வளிக்கும். பொ-சொன்ன வா-க்குப் போனகங் கிடையாது.

(iv) குறைகதை

விசயநகரப் பேரரசருள் தலைசிறந்தவரான கிருட்டிண தேவ ராயருக்கு, சாளுவத் திம்மரசு என்பவர் தலைமையமைச்சரா யிருந்தார். அவரை அனைவரும் அப்பாஜி என்றழைப்பது வழக்கம். அவர் சாலோமோன் போன்ற நுண்மதியர்; எவ்வகைச் சிக்கலான செ-தியையும் அவர் எளிதா-த் தீர்த்துவிடுவார். அவரது சூழ்வினைக் கெட்டாத உலகியற் செ-தி எதுவுமே யிருந்ததில்லை. அவருடைய பேரும் புகழும் தென்னாட்டில் மட்டுமன்றி வடநாட்டிலும் பரவிற்று.

அப்போது டில்லியிலிருந்த மகமதியப் பேரரசர், அவரது திறமையைப் பற்றிக் கேள்விப்பட்டு, அவர் மதிநுட்பத்தை அறியும் பொருட்டு, ஒரே யளவாயும் ஒரே வடிவாயுமுள்ள மூன்று சிறு படிமை களை (விக்கிரகங்களை)க் கிருட்டிண தேவராயரிடம் அனுப்பி, அவற் றுள் எது தலையானவனையும் எது டையானவனையும் எது கடை யானவனையும் ஒக்குமென்று, அவருடைய அமைச்சரைக்கொண்டு அறிந்து தெரிவிக்குமாறு எழுதியிருந்தார், கிருட்டிண தேவராயர் முதலாவது அவற்றைத் தம் துணையமைச்ச ரெல்லாரிடமும் காட்டி னார். அவர் அவற்றைப் பார்த்துவிட்டு, அம் மூன்று படிமைகளும் ஒன்றுபோலுள்ளன வென்றும், அவற்றிடை வேறுபாடு காணமுடியா தென்றும் சொல்லிவிட்டனர்.

முழுக்கதை

விசயநகரப் பேரரசருள் தலைசிறந்தவரான கிருட்டிண தேவராய ருக்கு, சாளுவத் திம்மரசு என்பவர் தலையமைச்சராயிருந்தார். அவரை அனைவரும் அப்பாஜி என்றழைப்பது வழக்கம். அவர் சாலோமோன் போன்ற நுண்மதியர்; எவ்வகைச் சிக்கலான செ-தியையும் அவர் எளிதா-த் தீர்த்துவிடுவார். அவரது சூழ்வினைக்கெட்டாத உலகியற் செ-தி எதுவுமே யிருந்ததில்லை. அவருடைய பேரும் புகழும் தென்னாட்டில் மட்டுமன்றி வடநாட்டிலும் பரவிற்று.