உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

அப்போது டில்லியிலிருந்து மகமதியப் மகமதியப் பேரரசர், அவரது திறமையைப்பற்றிக் கேள்விப்பட்டு, அவர் மதிநுட்பத்தை அறியும் பொருட்டு, ஒரேயளவாயும் ஒரே வடிவாயுமுள்ள மூன்று சிறு படிமை களை (விக்கிரமங்களை)க் கிருட்டிண தேவராயரிடம் அனுப்பி, அவற்றுள் எது தலையானவனையும் எது இடையானவனையும் எது கடையானவனையும்

ஒக்குமென்று, அவருடைய அமைச்சரைக் கொண்டு அறிந்து தெரிவிக்குமாறு எழுதியிருந்தார். கிருட்டிண தேவ ராயர் முதலாவது அவற்றைத் தம் துணையமைச்ச ரெல்லாரிடமுங் காட்டினார். அவர் அவற்றைப் பார்த்துவிட்டு, அம் மூன்று படிமை களும் ஒன்றுபோ லுள்ளனவென்றும் அவற்றிடை வேறுபாடு காண முடியாதென்றும் சொல்லிவிட்டனர்.

பின்பு, இராயர் அவற்றை அப்பாஜியிடம் காட்டினார். அவர் அவற்றைக் கூர்ந்து நோக்கி, அவற்றின் காதுகளில் நுண்துளையிருப் பதைக் கண்டு, ஒவ்வொன்றின் காதிலும் ஒவ்வோர் ஈர்க்கைச் செலுத் தினார். அங்ஙனஞ் செலுத்திய ஈர்க்கு, ஒன்றிற்கு வா-வழியாகப் புறப் பட்டது; இன்னொன்றிற்கு மறுகாது வழியாகப் புறப்பட்டது. இன் னொன்றிற்கு உள்ளே சென்று வெளியே வரவேயில்லை. அதனால், ஈர்க்கு உள்ளே சென்று வெளியே வராத படிமையைப்போல், கேட்ட செ-தியைத் தன் உள்ளத்தே யடக்குகின்றவன் தலையானவன் என்றும், ஈர்க்கு உள்ளே சென்று மறு காது வழியாகப் புறப்பட்ட படிமையைப் போல், கேட்ட செ-தியை மறு காது வழியா விட்டு விடுகின்றவன் இடையானவன் என்றும், ஈர்க்கு உள்ளே சென்று உள்ளே சென்று வா-வழியாகப் புறப்பட்ட படிமையைப்போல் கேட்ட செ-தியை வா-வழியாகக் கொட்டிவிடுகின்றவன் கடையானவன் என்றும், அப்பாஜி சொல்ல, அப்படியே இராயரும் டில்லிக்கு எழுதியனுப்பி விட்டார். டில்லி அரசர் அப்பாஜியின் மதிநுட்பத்தை வியந்து அவருக்கு விலையேறப் பெற்ற ஒரு வயிர மோதிரத்தைப் பரிசாக அளித்தார்.

எதையும் உற்றுநோக்கி ஊகித்தறியவேண்டும். ஆயினும், அதற் கேற்ற மதிநுட்பம் பல்லாயிரவருள் ஒருவருக்கே அமைந்துள்ளது.