உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரையியல்

5. தன்வரலாறு அல்லது தற்சரிதை

(Autobiography)

97

ஒருவரது வாழ்க்கையைப்பற்றி முழுக்க வரைவது வாழ்க்கை வரலாறு. இது பொதுவா-ப் பிறராலேயே வரையப்பெறும். ஒருவர் தம் வாழ்க்கை வரலாற்றைத் தாமே வரையின், அது தன்வரலாறு அல்லது தற்சரிதை எனப்பெறும்.

உயர்திணையாயினும், அஃறிணையாயினும் ஒவ்வொரு பொரு ளுக்கும் ஒவ்வொரு வரலாறுண்டு. உயர்திணையைச் சேர்ந்த மக்கள் பேசவும் எழுதவும் கூடுமாதலின் அவர் வரலாற்றை அவரே சொல்லு தலும் வரைதலும் இயலும். உயிருள்ளவும் உயிரில்லவுமான அஃறிணை யுயிர்கட்கு அஃது எங்ஙனம் இயலும்? ஆதலின், அவற்றின் வரலாற்றை மக்களே சொல்லுதல் அல்லது வரைதல் வேண்டும். அங்ஙனம் சொல் வதை, அவையே சொல்வது போலச் சொல்லுதல் அல்லது வரை தலும், தன்வரலாறு எனப்படும்.

மக்கள் தன்வரலாறாயின், அதை வரைவதற்கு நினைவாற்றல் ஒன்றே போதும். அஃறிணைப் பொருள்களைப் பற்றியதாயின் அதற்கு நினைவாற்றலோடு பாணிப்பாற்றலும் (Power if imagination) வேண்டும். இங்ஙனம் மக்கள் தன்வரலாறு எளிதாயும், மற்றவர்களின் தன்வரலாறு அரிதாயுமிருத்தலின்; ஈண்டு மாணவர் பயிற்சிக்கு, அரிதான அஃறிணை பற்றியதே எடுத்துக்கொள்ளப்பெறும்.

தன்வரலாறும் ஒருவகைக் சுரித்திரமே யாயினும் அது நாட்டு வரலாறுபோல் நிகழ்ச்சி கூறுவதா- மட்டுமிராது, இனிய கதைப் போக்கில் எழுதப்பெறல் வேண்டும்.

போலிகைகள்

(1) கோகினூர் வயிரத்தின் தன்வரலாறு

உலகத்தில் பெயர்பெற்ற வயிரங்களுள் ஒன்றானதும், தற்போது ஆங்கில வேந்தரின் மகுடத்திற் பதிக்கப்பெற்றுள்ள மாபெரு வயிரமு மான நான், பல நூற்றாண்டுகட்கு முன், தென்னிந்தியாவிற் கிருட் டிணை (கிரு ணா) யாற்றங் கரையிலுள்ள கோல்கொண்டாவில் ஒரு வயிரச் சுரங்கத்தில் வெட்டியெடுக்கப்பெற்றேன். பல பெருங்கை கடந்த பின்,