உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

என்னை

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

1526-ல், முகலாயப் பேரரசின் நிறுவலரான பேபரிடம் சேர்ந்தேன். அவர் டில்லி அரண்மனைச் செல்வங்களுள் சிறந்ததாகப் போற்றிவைத்தார். என் செ-தி உலகமெங்கும் பரவிற்று. பல பேரரசர் என்மேற் கண் வைத்திருந்தனர். முகலாயப் பேரரசரைப் பார்க்குமாறு டில்லிக்கு வந்த அயல்நாட்டுப் பெருமக்களெல்லாம், என்னைக் காணாது செல்வதில்லை.

பேபருக்குப்பின், அவர் வழியினர்க்கு வரிசைப்படி ஒன்பது தலைமுறை வரைக்கும் உரிமையானேன். ஐந்தாம் தலைமுறையின ரான ஔரங்கசீப் காலத்தில், 1665-ல் தேவர்னியர் (Tavernier) என்னும் பிரெஞ்சிய வழிப்போக்கர் டில்லிக்கு வந்திருந்தபோது, நான் அவருக்குக் காட்டப்பட்டேன். அவர் என்னைப்பற்றி மிகமிக வியந்து பேசி, என் எடை வடிவம் முதலிய பல இயல்புகளையும் தம் நாட் குறிப்புப் புத்தகத்தில் குறித்துவைத்துக்கொண்டார்.

"

ஔரங்கசீப் காலத்திற்குப்பின், முகலாயப் பேரரசு வரவர வலி குன்றியது. எனக்கும் ஒரேயிடத்தில் நீண்ட நாளிருந்து சலித்துப் போ- டமாற்றம் ஏற்பட்டால் நன்றாயிருக்குமெனத் தோன்றிற்று. ஒன்பதாம் தலைமுறையினரான நைசாம் உல் முலுக்கு என்னும் முகமதுசா காலத்தில், 1739-ல், பாரசீக வேந்தரான நாதிர்சா இந்தியாவின் மேற் படையெடுத்து வந்து, டில்லியைக் கொள்ளையிட்டுத் தாம் கருதியிருந்தபடி என்னையும் எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார். அவருக்கு என்னைப்பற்றி யிருந்த மதிப்பு அளவிடற்கரியது. அவரே எனக்குக் கோகினூர் என்று பெயரிட்டார். ஒளிமலை என்பது இப் பெயர்ப் பொருள். 1747-ல் அவர் கொல்லப்பட்டபின் அவருடைய குதிரைப் படைத் தலைவருள் ஒருவரா யிருந்தவரும் ஆப்கானிய மன்னருமான, அகமதுசா கைப்பட்டேன். அவர் 1773-ல் இறந்தார். அதன்பின் அவர் பின்னோர் வயமானேன். அவருள் ஒருவரான சாசூசா 1813-ல் தம் பகைவரால் துரத்துண்டு லாகூரில் ரஞ்சிட்சிங் கிடம் அடைக்கலம் புகுந்திருந்த போது, அச் சீக்கிய மன்னர் சமையத்தை நன்றாகப் பயன்படுத்தி என்னைக் கவர்ந்துகொண்டார். குருடன் கையிற் சிக்கிய விலாங்குபோற் கிடைத்த என்னைக் கண்ட வுடன், அவருக்கெழுந்த கொண்டாட்டம் கொஞ்சநஞ்சமன்று. அவர் காலமெல்லாம் என்னை உயிரினும் அரிய பொக்கிசமாகப் போற்றி வந்தார்.