உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரையியல்

99

அவர் 1839-ல் இறந்தபின், ஆங்கிலருக்கும் சீக்கியருக்கும் இரு போர் நிகழ்ந்தன. அவற்றுள் இரண்டாவதன் விளைவாக, 1849-ல், பஞ்சாபுநாடு ஆங்கில இந்தியாவுடன் இணைக்கப்பட்டபோது, அந் நாட்டுத் தலைசிறந்த செல்வமான நானும், கிழக்கிந்தியக் குழும்பார் (East India Company) கைப்புகுந்தேன். அக் குழும்பார் என்னை 1850- ல் விக்டோரியாப் பேரரசியாரிடம் அளித்தனர். அதிலிருந்து, இவ் இலண்டன் மாநரிலேயே இருந்துவருகின்றேன். இனி, உலகுள்ள வரையும் இங்கேயே இருப்பேன். பல நூற்றாண்டு களாகப் பல நாடுகள் சுற்றிக் களைத்துப்போனமையாலும், உலகத்திற் சிறந்த ஆட்சியுள்ள நாடு இவ் இலண்டனே யாதலாலும்; இங்கு எத்தனை ஊழிகள் கடப்பினும், எனக்கு எள்ளளவும் வெறுப்புத் தோன்றாது.

"

என்னை இன்று காண்பவர், நான் என்றுமே ஏறத்தாழ இவ்வளவு பருமன் இருந்திருப்பேன் என்று கருதலாம். என் பழைய நிலைமை யைச் சொன்னாற் பலர் நம்பமாட்டார். நான் முதலாவது கோழி முட்டை வடிவில் 793 5/8 காரட்டு (carats) எடையிருந்தேன். பேபருக்குப் பிற்காலத்தில், ஒரு தேர்ச்சியில்லாத மணிக்கொல்லன் என்னை முக் கூறாக்கியபின், நான் அரைமுட்டை வடிவமா- 280 காரட்டு எடை யேன் ஆனேன். என்னொடு சேர்ந்த இரு துண்டுகளுள், ஒன்றை ரசியரும் இன்னொன்றை அப்பாசு மிர்சாவும் (Abbas Mirsa),அடைந்ததாகச் சொல்கின்றனர். நான் பலகைபட்டுத் தே-ந்ததினால், 1851-ல் இவ் லண்டன் மாநகரில் நடைபெற்ற பெருங்காட்சிச் சாலையில் (Great Ex- hibition) வைக்கப்பெற்றிருந்த போது, 186 1/16 காராட்டுதான் இருந்தேன். அவ் வெடையிலும் என்னை விட்டு வைத்திலர். எனக்கு அழகிய வடிவுறுத்தக் கருதி, ரோசா மலர் வடிவில் என்னைச் செதுக்கி, என் எடையை 106 1/16 காரட்டாகக் குறைந்து விட்டனர். 'உலக்கை தே-ந்து உளிப்பிடியானதுபோல்' என் பருமன் குன்றியிருப்பினும், நான் விக்டோரியா பேரரசியாரின் மகுடத்திற் பதிக்கப்பெற்று அவர் தலைமேற் சூடப்பெற்றதினாலும், இனிமேல் எனக்குக் குறைப்பிராது என்னும் நம்பிக்கையினாலும், இக் குன்றிய அளவிலும் பெருவிலைமதிப்புப் பெறுவதினாலும், சிறிதும் வருந்தா திருக்கின்றேன்.

நான் சுரங்கத்திலிருந்து எடுக்கப்பட்டது முதல், இவ்வுலகமா நகர் வந்துசேரும் வரையும், எனக்காகவும் என்னாலும் அரசரிடை நிகழ்ந்த