உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

பகையும் போரும் இழப்பும் சேதமும் எத்தனையோ பல. அவற்றுள் ஒருசிலவே வரலாற்றில் வரையப்பட்டுள. ஏனையவெல் லாம் எனக்குத் தான் தெரியும். இனிமேல் அத்தகைய தீங்கொன்றும் என்னால் மக்களுக்கு நேராது என்பதை நினைக்கும்போது, என் உள்ளம் மிக ஆறுதலடைகின்றது.

உலகத்திலுள்ள விலையேறப்பெற்ற உடைமைகளுள் ஒன்றான நான், இந்தியாவிற் பிறந்தும் இந்தியருக் குரிமையாகாமல், ஆறாயிரங் கல் தொலைவிலுள்ள ஆங்கிலருக் குரிமையானதுபற்றி, பல இந்தியர் அழுக்காறு கொள்ளலாம். ஆயின், என்னால் மக்கள் நுகரும் நுகர்ச்சி யெல்லாம், காட்சியின்பம் ஒன்றுதானே? அறிவியலுலகிற்கு நடுமைய மாயிருப்பதும், பன்னாட்டு மக்கள் பாங்கா- வாழ்வதும், பண்பட்ட மக்கள் பதியாயிருப்பதும், அயலார்க்கெல்லாம் முழுப் பாதுகாப் பளிப்பதும் பிறநாட்டு மக்கள் பெருந்தொகையரா- வந்து பெயர் வதும், உலக முழுவதிலும் உயர்ந்த மக்கட்டொகை யுள்ளதுமான இவ் இலண்டனையன்றி வேறெவ்விடத்தில் நான் மக்கட்குச் சிறந்த பயன் பட முடியும்? இதனாலன்றோ, எல்லா மறிந்த இறைவனும் என்னை இங்கு வரச் செ-தனன்! ஆதலால், கீழுலகத்தினின்று மேலுல கத்திற்கு வந்து மேன்மையுற்றேனே யன்றிக் கீழ்மையுற்றே னல்லேன் என்பதை, எண்ணித் தெளிக.

(2) ஓர் எருதின் தன்வரலாறு

சாத்தன் என்னும் பெயருள்ள நான், பத்து ஆண்டுகட்குமுன், சென்னையில் ஒரு பாற்காரன் வைத்திருந்த ஆவினிடம் பிறந்தேன். நான் பிறந்ததிலிருந்து, என் உடையான் என்னைச் சரியா-ப் பால் குடிக்க விடுவதேயில்லை. பாற்காம்பில் வா- வைத்து உறிஞ்சத் தொடங்கியவுடன், என்னை யிழுத்துப் பக்கத்திலுள்ள தூணிற் கட்டி விட்டு, என் எதிரில் எல்லாப் பாலையும் கறந்துகொண்டு, வறுங் காம்பைச் சுவைக்கவிடுவான். இதை எந்த உயிர்க்கொடுமை விலக்குக் கழகத்தாரும் கவனிப்பதேயில்லை. எனக்காவது இந்த நிலை; இன்னோ ராவிற்குப் பிறந்த கன்றிற்கு இதுவுமில்லை. அதனால் அது இறந்து விட்டது. என் உடையான் அதன் தோலை உரித்து, அதற்குள் வைக் கோலைத் திணித்துத் தைத்து, நான்கு கால்போல் நான்கு குச்சு வைத்துக் கட்டி, அதன் தாயின் முன் உயிருள்ள கன்றுபோல் நிறுத்திப் பால் கறந்து வந்தான்.