உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரையியல்

66

101

ஒரு முறை ஆம்பூரினின்று திருப்பதிக்குப் போ-த் திரும்பின ஏழ்மலையான், என் உடையான் வீட்டில் தங்க நேர்ந்தது. நான் தோலும் எலும்புமாயிருந்ததைக் கண்டு இரங்கி, என் உடையானை நோக்கி “ஏன் இதைச் சரியா-ப் பால்குடிக்க விடாமல், இப்படி மெலிய வைத்தா-? என்று கேட்டதற்கு, அவன் "முழுப் பாலும் குடிக்கவிட்டால் கன்று செத்துப் போகுமே!” என்று, உண்மை சொல் பவன் போல் கொடுமையா-ப் பதிலிறுத் தான். அதைக் கேட்ட ஏழ்மலை யான், “அப்படியானால் ஒரு விலையிட்டு என்னிடம் கொடு; நான் கொண்டுபோ- வளர்த்துக் கொள்கிறேன்" என்று சொல்ல, அதற்கு என் உடையானும் இசைந்து, என்னை அவனிடம் ஆறு உருபாவிற்குத் தள்ளிவிட்டான். நான் மறுநாளே ஆம்பூர் வந்து சேர்ந்தேன்.

ஆம்பூருக்கு வந்தவுடன் எனக்கு நல்ல காலம் பிறந்தது, ஏழ்மலையான் எனக்கு நாள்தோறும் நல்ல புல் வைத்து, சுவையுஞ் சத்துமுள்ள ஊறல் காட்டி வந்தான். நான் பால்குடி மறந்திருந்ததினால், அவன் இட்ட உணவு எனக்கு நன்றாகப் பிடித்தது. சிலநாட் சென்று பருத்திக்கொட்டையும் வைக்கத் தொடங்கியதால் ஓராண்டிற்குள் உருப்பட்டுவிட்டேன். ஈராண்டு கழித்து, நான் நல்ல காளங்கன்றா யிருந்தபோது, சேலத்தானும் ஏழ்மலையானுக்கு உறவினனுமான நாகப்பன் என்பவன் என்னைத் தன் ஒற்றைமாட்டு வண்டிக்கு வாங்கிக் கொண்டு வந்துவிட்டான்.

நாகப்பன் ஏழையென்ற காரணத்தினால் ஏழ்மலையான் அவனுக்கு என்னைக் குறைந்த விலைக்கே கொடுத்தான். ஆனால், நான் மீண்டும் ஏழையா- விடுவேனே என்பதை அவன் எண்ணவில்லை. சேலம் வந்த பின் நான் பட்டபாடு கடவுட்குத்தான் தெரியும். சரியான தீனியில் லாமல் இரவு பகலா-க் கடுமையாக உழைத்து வந்தேன். திருவிழாக் காலங் களிலோ, சற்றுப் படுத்திளைப்பாறக்கூட முடியாது. மாட்டுழைப்பு என்று சொல்வது என் வேலைக்கே பொருந்தும். மாந்தர் செ- யும் வேலைக்கு மணிக்கணக்கு ஏற்படுத்தி யிருக்கின்றனர். நாங்கள் செ-யும் வேலைக்கு யார் ஏற்படுத்துவது? சட்டசபையில் எங்களுக் காகப் பேசுபவர் ஒருவரு மில்லையே! இருந்தாலும் மூவாண்டு பொறுத்து இறைவன் திருவருளால் ஒரு மாறுதல் ஏற்பட்டது. நான் வர வர மெலிந்துபோனதைக் கண்ட அக்கம் பக்கத்தார், நான் நல்ல குலக் காளையென்றும், என்னை நன்றாகப் பேணக் கூடியவரிடம் விற்று விட்டு வேறொரு தாழ்குலக் காளையை வாங்கிக் கொள்ள வேண்டு மென்றும், பலமுறை வற்புறுத்திச் சொன்னதின்