உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

பயனாக, நாகப்பன் என்னை இப் பழையகோட்டைப் பட்டக்காரரிடம் கொண்டு வந்து விற்றுவிட்டான்.

இவர் அவனுக்கு எவ்வளவு கொடுத்தாரோ தெரியவில்லை. ஆனால் உயர்ந்த விலை கொடுத்ததாகத்தான் கேள்வி. இங்கு வந்தபின் எனக்குப் பொற் காலம் பிறந்தது. பட்டக்காரர் என்னை ஒரு பிள்ளை யைப் போல்தான் பேணி வருகிறார். பிற மாடுகளையும் இப்படியே. இப்படி எங்கள் குலத்தைப் பாதுகாப்பவர் வேறொருவர் இவ் வுலகத்தி லுண்டோ என்பது ஐயுறவுதான். மிக எளிய வேலையும் மிக வுயர்ந்த உணவும் இட்டு, எங்கட்கும் ஒரு விண்ணுலகேற் படுத்திய இப்பட்டக் காரர் குடும்பம், வழிவழி வாழ்க.

பயிற்சி 1

பின்வருங் குறிப்புகளைக்கொண்டு தன்வரலாறு வரைக:

1. பட்டுப்பூச்சி -முசுக்கட்டையிலையில் முட்டை;

உலண்டு

(larva); பொற்புழு (dhrysalis): நூற்கூடு (cocoon), பட்டுப்பூச்சி.

2. காசு (நாணயம்) - தங்கசாலையில் உலோகத்தை உருக்குதல், பாளமாக வார்த்துத் தகடாக்குதல், வட்டத்துண்டுகளாக நறுக்குதல் ஓரத்தில் வரையுறுத்தல் முத்திரையையும் எழுத்துகளையும் பொறித்தல், அரசியற் பொக்கிசசாலைக் கனுப்புதல் அங்கிருந்து காசுக்கடைகட்குப் போக்குதல் காசோலை (cheque) மாற்றப்படல் காசு குடிகள் கைப்படல் கடைகாரனிடம் செல்லுதல், பலரிடமும் சுற்றித்தே-தல் தே-ந்தபின் செல்லாமை உலோக மதிப்படைதல்.

3. காவிரி தலைக்காவிரி, பாகமண்டலமும் கனகையாறும் கிருட்டிண ராச சாகரம். சிவசமுத்திர நீழ்வீழ்ச்சி, ஆடு தாண்டும் காவிரி, புகைக்கல் ( ஹொகெனகல்) நீர் வீழ்ச்சி - மேட்டூர் அணை, அகண்ட காவிரி கொள்ளிடப்பிரிவு, தனிக் காவிரி, காவிரி கடலொடு கலத்தல்.

4. மழை

-

-

கடல் ஏரி முதலிய நீர்நிலைகளிலுள்ள நீர் ஆவியாக மாறி மேலெழுதல்; முகில் (மேகம்) அமைதல்; குளிர்ந்த காற்றால் நீரணுக் களாதல்; கீழ்விழுதல்.

5. ஒரு மடங்கல் ( சிங்கம்) காட்டில் ஈனப்பட்டு வளர்தல்; பெரிதானபின் வேட்டை யாடப் படல்; ஒரு மறவிளையாட்டுக் குழுவிற்கு (circus company) விற்கப்படல்; பயிற்சியும் புரிவும்; கிழப்படுதல்; விலங்கினச் சாலை யடைதல்.