உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரையியல்

103

6. ஓர் ஆலமரம் ஒரு காகத்தால் விதையிடப்படல்; முளைத்தல்; வளர்தல்; விழுதூன்றல்; பரவுதல்.

7. ஒரு புத்தகம் இங்கிலாந்தில் அச்சிடப்பெறல்; கலத்தில் வருதல்; பம்பாயில் இறங்கிப் புகைவண்டியில் வருதல், சென்னைப் புத்தகக் கடை யடைதல்; ஒரு செல்வரால் வாங்கப் பெறுதல்; பழம் புத்தகக்கடை யடைதல்; ஓர் ஏழையால் வாங்கப் பெறல்; வழிமுறையார்க்குப் பயன்படல்.

8. ஒரு வேட்டை நா-

இராசபாளையத்தில் பிறந்து வளர்தல்;

வேற்றூர் கொண்டுபோகப்படல்; பயிற்றப்படல்; வேட்டையாடல்; தேர்ச்சி; ஒரு வேளால் வாங்கப்பெறல்.

9. ஓர் உருள்கல்

மலையிற் பெரிய கல்லாயிருத்தல்:

சிறிதாதல்;

ஆற்றோட்டத்தில் உருண்டு வரல்; வரவரச்

வடிவடைதல்; மணியாசக் கல்லாகப் பயன்படல்.

10. பனிமலை (இமயம்) கடலுக்குள்ளிருத்தல்: அடிநிலத்துட் கொதிப்பு; நீர்மேலெழுதல்; விந்தமலையைத் தாழ்த்தல், பெருமை பெறல்.

பயிற்சி 2

பின் வருபவற்றின் தன்வரலாறு வரைக:

1. ஒரு குதிரை. 2. ஓர் இயங்கி (Motor Car). 3. ஒரு மொழி. 4. ஒரு சொல் 5. சென்னை நகர். 6. புகையிலை. 7. ஒரு கடிகாரம். 8. ஒரு கடிதம். 9. கொக்கோ. 10. வானூர்தி. 11. திரைப்படம். 12. எழுத்து. 13. பொன். 14. ஓர் அணிகலம். 15. தஞ்சைப் பெருவுடையார் கோயில். 16. ஓர் ஆடை. 17. ஒரு நிலம்பெயர் ( Migratory) 18. ஒரு தெ-வச்சிலை (விக்கிரகம்). 19. பேசுங் கிளி.

6. உரையாட்டு வரைவு ( Dialogue Writing)

இருவர் உரையாடுவதுபோல் வரைவது உரையாட்டு வரை வாகும். இவ் வுரையாட்டு, உண்மையா- நடந்ததாகவு மிருக்கலாம் நடவாத தாகவு மிருக்கலாம் கல்வி நிலையங்களில், பல்வேறு பொருள் களைப் பற்றி உரையாட்டு வரையும்படி மாணவர் கேட்கப் படுவராத லால், அவை பொதுவா- நடவாதவாகவே யிருக்கும்.

மனத்தில் இருவரைப் படைத்துக்கொண்டு அவர் உரையாடுவது போல நடிப்புக் காட்டுவதால், உரையாட்டு வரைவிற்குப் பாணிப்பாற் றலும்