உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

ஏரண அறிவும் நாடகத் திறமையும் வேண்டும்! ஆதலால், உரையாட்டு வரைவு கட்டுரை வரைவினுஞ் சிறந்த பயிற்சியாகும். உரையாட்டு வரைவில் தேர்ச்சிபெறும் மாணவர், பிற்காலத்தில் சிறந்த புதின (Novel) ஆசிரியராகவோ நாடக நூலாசிரியராகவோ விளங்கலாம்.

வரையப்பட்ட உரையாட்டு, இயல்பானதாகவும் எளிய நடை யிலும் இருத்தல் வேண்டும். ஆயின், இலக்கணப் பிழை எதுவுமிருத் தல் கூடாது. அதோடு, கொச்சைச் (slang) சொற்களையும் இடக்கர்ச் (vulgar) சொற்களையும் விலக்கிவிடல் வேண்டும்.

இயல்பான முறையில் வரைதற்கு, மக்கள் அன்றாட வாழ்க்கை யிற் பேசும் பேச்சுகளைக் கவனித்தல் வேண்டும். இலக்கண நடையில் வரைதற்கு, அறிஞர் எழுதிய புதினங்களையும் உரைநடை நாடக நூல் களையும் படித்தல் வேண்டும்.

உரையாட்டை, ஈரஃறிணைப் பொருள்களிடை நிகழ்வதாகவும்

பாணிப்பா- வரையலாம்.

i. வரையப்பட்ட உரையாட்டிற்கும் தருக்கக் கட்டுரைக்கும்

வேறுபாடு

வரையப்பட்ட உரையாட்டு, சில வொப்புமைபற்றித் தருக்கக் கட்டுரை போல் தோன்றலாம். ஆயினும் அவ் விரண்டிற்கும் வேறுபா டுண்டு. அவையாவன:

1.

உரையாட்டில், உரையாடும் இருவர் பெயரும் குறிக்கப்பட்டு, அவ் விருவர் கூற்றும் மாறிமாறி நின்று தனித்தனி முடிதல் வேண்டும்; தருக்கக் கட்டுரையிலோ, தருக்கிக்கும் இருவர் பெயருள் ஒன்றுங் குறிக்கப்படாமல், அவ் விருவருள் ஒருவரே பிறர் கூற்றையும் கொண்டு கூறித் தம் கூற்றுடன் இணைத்து முடித்தல் வேண்டும்.

2. உரையாட்டில் குறிக்கப்படும் இருவரும்,உரையாட்டு வரை பவரின் வேறானவர்; தருக்கக் கட்டுரையிலோ, கட்டுரை வரை பவரே தருக் கிக்கும் இருவருள் ஒருவர்.

3. உரையாட்டு, உரையாடுவார் உடன்பட்ட கருத்துப் பற்றியதாகவு மிருக்கலாம்; அல்லதாகவு மிருக்கலாம்; தருக்கக் கட்டுரையோ, என்றும் உடன்படாத கருத்துப்பற்றியே யிருக்கும்.

4.

உரையாட்டு இயல்பானதாயிருக்க வேண்டுமாதலால், அது பெரும் பாலும் எளிய நடையிலேயே எழுதப்பெறும்; புலவர் உரை யாட்டாயின் உயர்ந்த நடையிலு மிருக்கலாம்; ஆனால், தருக்கக் கட்டுரையோ, எளிய நடையிலிருத்தல் வேண்டும் என்னும் யாப்புரவு (நியதி)